Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளியேறிய அக்கி, விக்கி: 'தல'யாக மாறும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?
மும்பை: வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஃபர்ஹத் சம்ஜி. தி லேண்ட் ஆஃப் லுங்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. டேட்ஸ் பிரச்சனையால் அவர் விலக விக்கி கவுஷலை அணுகினார்கள். முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட அவரும் டேட்ஸ் பிரச்சனையை காரணம் காட்டி வெளியேறினார்.

இந்நிலையில் ஜீரோ படம் படுதோல்வி அடைந்த பிறகு புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் ஷாருக்கானை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது குறித்து ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வித்தியாசமாக நடித்த ஜீரோ படம் சுத்தமாக ஓடவில்லை. அதன் பிறகு ஒரு குட்டி பிரேக் எடுத்து குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் கடந்த வாரம் தனது மனைவி, 3 பிள்ளைகளுடன் மாலத்தீவுகளுக்கு சென்றார். இதற்கிடையே புதுப்படம் குறித்து ஷாருக்கான் கூறியதாவது,
நான் தற்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவும் இல்லை, நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. வழக்கமாக ஒரு படம் முடியும் நேரத்தில் அடுத்த பட வேலைகளை துவங்கிவிடுவேன். 3-4 மாதங்கள் ஷூட்டிங் போகும். இப்படியே ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது உடனே புதுப்படத்தை ஒப்புக் கொள்ளத் தோன்றவில்லை.
டிவிட்டரில்
ட்ரென்ட்டாகும்
சல்யூட்
மை
சிங்கப்பெண்ணே..
அசத்தும்
விஜய்
ரசிகர்கள்!
என் பிள்ளைகள் கல்லூரிக்கு செல்லும் நிலைக்கு வந்துவிட்டனர். அதனால் குடும்பத்தாருடன் கூடுதல் நேரம் செலவிட விரும்புகிறேன் என்றார்.
வீரம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நேரத்தில் அஜித்தை வைத்து நேரடி இந்தி படத்தை தயாரிக்க விரும்புகிறார் போனி கபூர். அவரும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் இந்த ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அஜித் கண்டுகொள்வதாக இல்லை.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.