ஜவானில் இவரு… தளபதி 67ல் அவரு… விஜய் – ஷாருக்கான் கேமியோ அக்ரிமெண்ட்
சென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பரபரக்கும் தளபதி 67
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கும் விஜய், இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 கேங்ஸ்டர் ஜானரில் மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக திரிஷா அல்லது சமந்தா நடிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67ல் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட லோகேஷ், அதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வில் பிஸியாக இருக்கிறார்.

விஷாலுடன் மீட்டிங்
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஷாலை சந்தித்து பேசினார். மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனால், தளபதி 67 படத்தில் விஷால் வில்லனாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தளபதி 67ல் விஷால் தான் மெயின் வில்லனாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கேமியோ ரோலில் ஷாருக்கான்?
ஏற்கனவே 'தளபதி 67'ல் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் தளபதி 67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானுக்கு கேமியோ ரோல் என்றும், விஜய்யின் நண்பராக நடிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'காட்ஃபாதர்' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது தளபதி 67ல் ஷாருக்கான் நடிக்கலாம் என்பது, கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜவானில் விஜய்?
முன்னதாக ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இதில், விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மேலும், ஷாருக்கானும் விஜய்யும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சந்தித்துக்கொண்டனர். இதனாலேயே தளபதி 67ல் ஷாருக்கான் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











