»   »  என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்

என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் மனைவி எந்த வயதில் தாயானால் மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று நடிகர் ஷாஹித் கபூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு 35 வயதாகிறது. 21 வயதில் அவரின் மனைவி மீரா ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஒரு சின்னப் பெண்ணை திருமணம் செய்து தாயாக்குவதா என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்தனர்.

இதை பார்த்த ஷாஹித் கூறியிருப்பதாவது,

விமர்சனம்

விமர்சனம்

முக்கியமானவர்களை விமர்சித்து அதன் மூலம் முக்கியத்துவம் பெற நினைக்கும் மக்களை நான் கண்டுகொள்வது இல்லை. மீராவுக்கு இளம் வயதில் திருமணம் நடந்தது என்பதால் அவர் தனது அடையாளத்தை இழக்கவில்லை.

பெண்கள்

பெண்கள்

இன்று பெண்கள் தாங்கள் செய்ய விரும்புவதை எல்லாம் செய்கிறார்கள். அதை ஆண்களாகிய நாம் மதிக்க வேண்டும். வேலைக்கு செல்வது, வீட்டில் இருப்பது, தாயாவது என்பது பெண்களின் முடிவு.

மீரா

மீரா

என் மனைவி மீராவும், நானும் மகிழ்ச்சியாக உள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பிறரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதை விட்டு விமர்சிக்கக் கூடாது.

மனைவி

மனைவி

என் மனைவி வரும் முன்பு தான் வாழ்வில் தனிமையாக உணர்ந்தேன். ஆனால் தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என் மனைவி எப்பொழுது தாயாக வேண்டும் என்பதை அடுத்தவர்கள் சொல்லத் தேவையில்லை என ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Shahid Kapoor blasted netizens who criticised him for marrying a young girl and getting her pregnant soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil