»   »  தன்னைவிட 13 வயது குறைவான மீராவை மணந்த நடிகர் ஷாஹித்: அதுக்கு என்ன?

தன்னைவிட 13 வயது குறைவான மீராவை மணந்த நடிகர் ஷாஹித்: அதுக்கு என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னைவிட 13 வயது குறைவான மீரா ராஜ்புட்டை திருமணம் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு ஷாஹித் தனது முன்னாள் காதலிகளும், நடிகைகளுமான கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மும்பையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாஹிதின் முன்னாள் காதலிகளான கரீனா, பிரியங்கா, வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

ஷாஹித்

ஷாஹித்

34 வயதாகும் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது குறைவான 21 வயதாகும் மீராவை திருமணம் செய்துள்ளார். இவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்த முதல் பாலிவுட் நடிகர் ஷாஹித் கிடையாது. ஏற்கனவே பல பாலிவுட் நடிகர்கள் தங்களை விட அதிக வயது குறைவான பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

சயிப் அலி கான்

சயிப் அலி கான்

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். 2 வளர்ந்த குழந்தைகளுக்கு தந்தையான சயிப் 44 வயதானவர். அவர் தன்னை விட 10 வயது குறைவான கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்தார்.

ஆமீர்

ஆமீர்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர் கான்(50) தன்னைவிட 9 வயது குறைவான 41 வயது கிரண் ராவை காதலித்து மணந்தார். ஆமீருக்கு முதல் திருமணம் மூலம் வளர்ந்த மகனும், மகளும் உள்ளனர்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத் தன்னை விட 20 வயது குறைவான மான்யத்தாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

தர்மேந்திரா

தர்மேந்திரா

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(79) தன்னை விட 13 வயது குறைவான நடிகை ஹேமமாலினியை(66) காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷா, அஹானா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

திலீப் குமார்

திலீப் குமார்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாருக்கும்(92) அவருடைய மனைவி சாய்ரா பானுவுக்கும்(70) 22 வயது வித்தியாசம். வயது வித்தியாசம் அதிகமாக இருப்பினும் பாலிவுட் மெச்சும் தம்பதியாக வலம் வருகிறார்கள்.

English summary
Bollywood actor Shahid Kapoor has married 21-year old Mira Rajput who is 13 years younger than him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil