»   »  தியேட்டருக்கு முன்பே ஆன்லைனில் ரிலீசான 'உத்தா பஞ்சாப்'... அதிர்ச்சியில் படக்குழு!

தியேட்டருக்கு முன்பே ஆன்லைனில் ரிலீசான 'உத்தா பஞ்சாப்'... அதிர்ச்சியில் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தியேட்டரில் வெளியாகும் முன்பே உத்தா பஞ்சாப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ந்து போயிருக்கிறது.

தணிக்கை விவகாரத்தில் சென்சாரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற உத்தா பஞ்சாப் குழுவினர், படத்திலிருந்து ஒரு காட்சியை மட்டும் நீக்கி தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த பலரும் உத்தா பஞ்சாப் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தால் படத்திற்கு இலவசமாக விளம்பரமும் கிடைத்தது.

Shahid Kapoor's Udta Punjab Movie Leaked Online

இந்நிலையில் நேற்று மதியம் இப்படம் முழுவதும் இணையத்தில் வெளியானது. இது படக்குழு காதுகளை எட்ட உடனடியாக இப்படத்தை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

இணையத்திலிருந்து நீக்கி விட்டாலும் கூட படக்குழு இந்த விஷயத்தால் அதிர்ந்து போயிருக்கிறது. நாளை வெளியாகும் இப்படத்தில் ஷாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞராக ஷாகித் கபூரும், மருத்துவராக கரீனா கபூரும் நடித்திருக்கின்றனர்.

English summary
Shahid Kapoor-Kareena Kapoor Starrer Udta Punjab Movie leaked online Before Release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil