»   »  'இந்த தங்கங்களை' பாலிவுட் வாழ்த்தியாச்சு, நாமும் வாழ்த்தலாமே!

'இந்த தங்கங்களை' பாலிவுட் வாழ்த்தியாச்சு, நாமும் வாழ்த்தலாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதற்கு பாலிவுட் நடிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி பெங்களூரில் நடந்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

 உலகக் கோப்பை

உலகக் கோப்பை

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான்

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதாக தற்போது தான் கேள்விப்பட்டேன். போட்டியை பார்க்க முடியவில்லை. எவ்வளவு அருமை. பாய்ஸ், உங்களை பார்த்து, கட்டிப்பிடிக்க வேண்டும் என ஷாருக்கான் ட்வீட்டியுள்ளார்.

ரித்திக் ரோஷன்

காபில் படத்தில் பார்வையற்றவராக நடித்த ரித்திக் ரோஷன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நம் அனைவருக்கும் சிறந்த முன் உதாரணம்!! இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது!!! மிகவும் பெருமை! பிராவோ என வாழ்த்தியுள்ளார்.

 ராகேஷ் ரோஷன்

ராகேஷ் ரோஷன்

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்! இந்தியாவை பெருமையடையச் செய்த காபில் அணி நீங்கள்! என இயக்குனர் ராகேஷ் ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood celebrities wished Team India for winning T20 Blind World Cup 2017 by defeating Pakistan by nine wickets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil