»   »  "தில்வாலே"... தவறுதலாக கஜோலுக்கு முத்தம் கொடுத்த ஷாரூக்!

"தில்வாலே"... தவறுதலாக கஜோலுக்கு முத்தம் கொடுத்த ஷாரூக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய தில்வாலே படத்தில் துகுர் துகுர் பாடல் படமாக்கப்பட்ட விதம் தற்போது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

திரையில் சிறந்த காதல் ஜோடிகளாக தற்போதும் தங்களை நிரூபித்து வருகின்றனர் ஷாரூக்கும், கஜோலும்.

இவர்கள் இருவரும் கடந்த 1995-ம் ஆண்டு இணைந்து நடித்த, ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' திரைப்படம் ஆண்டுக்கணக்கில் திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது.

தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே...

தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே...

யாஷ் சோப்ரா தயாரித்திருந்த இப்படம், இந்தியத் திரையுலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. ஷாரூக் மற்றும் கஜோல் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்தது. இப்படம் மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' என்ற திரையரங்கில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து ஓடியது.

கோல்டன் ஜோடி...

கோல்டன் ஜோடி...

அதனைத் தொடர்ந்து திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகியிருந்த கஜோல், ஷாரூக்குடன் சேர்ந்து மை நேம் இஸ் கான் படத்தில் நடித்தார். பின்னர் கடந்தாண்டு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இந்த "கோல்டன் ஜோடி" தில்வாலே படத்தில் சேர்ந்து நடித்தனர்.

தில்வாலே...

தில்வாலே...

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கொண்டாடப்படவில்லை என்ற போதும், வெற்றிகரமாகவே திரையரங்குகளில் ஓடியது. இந்நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற துகுர் துகுர் பாடல் படமாக்கப்பட்ட விதம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

முத்தக்காட்சி...

முத்தக்காட்சி...

அதில் நடிகர்கள் அனைவரும் நடனப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக ஷாரூக், கஜோலுக்கு உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்றும் அதில் உள்ளது.

ஸாரி...

ஸாரி...

எதிர்பாராதவிதமாக கொடுத்துக் கொண்ட இந்த முத்தத்திற்காக இருவரும் ஒருவருக்கொருவர் ஸாரி கேட்டுக் கொண்டனராம். ஆனால் அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த இயக்குநர் ரோஹித் ஷெட்டி அன் கோவினர் தான் கேலி செய்து சிரித்து மகிழ்ந்தனராம்.

ரீல் ஜோடி...

இதுவரை இவர்கள் நடித்த எந்தப் படத்திலுமே இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெற்றதில்லை. ஆனாலும் ஈர்ப்புக்குரிய காதலர்களாக நடித்துக் கலக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The makers released the making of 'Tukur Tukur' song where the four stars- SRK, Kajol, Varun Dhawan and Kriti Sanon are seen practicing their steps and trying to get it right. During one such scene SRK turns to kiss Kajol and so does she. The incident left them very embarrassed and Kajol can be seen apologizing profusely. Meanwhile, Rohit and the entire team burst out laughing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil