»   »  டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கீழே தள்ளி குத்தப் பாய்ந்த ஷாருக்கான்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கீழே தள்ளி குத்தப் பாய்ந்த ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ஷாருக்கானிடம் விளையாடிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை அவர் கீழே தள்ளி முகத்தில் ஓங்கி குத்த சென்றுவிட்டார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் பேட்டி கொடுக்க டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷானுடன் பாலைவனப் பகுதியில் சென்றார்.


டிரைவர் வழி தவறி சென்று அவர்களின் கார் புதை மணலில் சிக்கியது.


ஷாருக்கான்

ஷாருக்கான்

கார் புதை மணலில் மூழ்கியது. ஷாருக்கான் அமைதியாக இருக்க முயன்றார். ஆனால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷான் பயத்தில் அலறினார். அந்த நேரம் பார்த்து கொமோடோ டிராகன் அவர்களை நோக்கி வந்தது.


அலறல்

அலறல்

கொமோடோ டிராகன் ஷாருக்கான் மற்றும் நிசானை நோக்கி வந்தது. நிசான் பயத்தால் அலறினார். ஷாருக்கோ மணலை அள்ளி டிராகன் மீது வீசினார்.


விளையாட்டு

விளையாட்டு

டிராகன் பக்கத்தில் வந்தபோது அதற்குள் இருந்து எகிப்தை சேர்ந்த காமெடி நடிகரும், ரமீஸ் அன்டர்கிரவுண்ட் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரமீஸ் வெளியே வந்தார். டிராகன் பொம்மைக்குள் இருந்தது ரமீஸ். ஆனால் அது பொம்மை போன்றே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கோபம்

கோபம்

ரமீஸை பார்த்ததும் ஷாருக்கான் இது எல்லாம் ஒரு விளையாட்டா, இதற்கு தான் நான் இந்தியாவில் இருந்து வந்தேனா என்று கேட்டு கோபத்தில் கொந்தளித்தார். மணலில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ரமீஸை தரையில் தள்ளி முகத்தில் ஓங்கு குத்தப் பார்த்தார்.


ரமீஸ்

ரமீஸ்

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஷாருக்கான் என்று ரமீஸ் மீண்டும் மீண்டும் கூறினார். ஷாருக்கானுக்கு ரமீஸ் பேசப் பேச கோபம் அதிகமாகி அவரை தரையில் தள்ள தரதரவென இழுத்துச் சென்றார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.


English summary
Shahrukh Khan is one of the coolest actors around and takes everything very sportively. At a recent shoot in Dubai, he proved that he too can be aggressive. He manhandled a prankster and almost punched him in the face after he realised that the prank went too far.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil