ஆபாச பட பெண் நட்சத்திரத்துடன் ஷாரூக் கான் புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்.. அலறும் பாலிவுட்!
மும்பை: சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும், ஆபாச பட நட்சத்திரமான கென்ட்ரா லஸ்ட்டும் இணைந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மைகளையும், மக்கள் மத்தியில் இது ஏற்படுத்திய சலசலப்புகளையும் இங்கே காணலாம்.
கென்ட்ரா லஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதயங்களின் மன்னனுடன் ஒரு சாதாரணமாக மாலைப்பொழுது” (Just a casual evening with the King of Hearts) என்ற கேப்ஷனுடன், ஷாருக் கானுடன் இருக்கும் ஒரு படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், கேள்விகளையும் எழுப்பியது.
ஆனால், இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. இருப்பினும், இது குறித்து நெட்டிசன்கள் பல சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர், "நீங்கள் இந்திப் படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா?" என்று கென்ட்ராவிடம் கேட்க, அதற்கு அவர், "அது வேடிக்கையாக இருக்கும்" என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

சன்னி லியோன்: மற்றொரு இணையவாசி, "கென்ட்ரா லஸ்ட், உங்களை பாலிவுட்டில் பார்க்க விரும்புகிறோம்" என்று பதிவிட, இன்னொருவர், "சன்னி லியோனும் பாலிவுட்டில் நடித்து வருகிறார், அவருக்கு நிறைய அன்பும் மரியாதையும் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டார். நடிகை சன்னி லியோனும் ஆபாச பட தயாரிப்பு உலகில் இருந்து இந்தியாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆபாச பட நடிகை: கென்ட்ரா லஸ்ட் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு ஆபாச பட நட்சத்திரம். ஆபாச பட தயாரிப்பு உலகில் இவருக்கு என்று தனி மார்க்கெட்டும் பார்வையாளர்களையும் கொண்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 86 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்த தீபாவளிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புடவை அணிந்து கொண்டு, கையில் மத்தாப்பூக்களைக் கொண்டும் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.47 வயதான கென்ட்ரா லஸ்ட் இந்தியாவை மிகவும் விரும்புபவராகத் தெரிகிறார். அவர் தனது இந்திய ரசிகர்களுக்காக தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார். புடவை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், தீபாவளி 2025, இந்தியத் திருவிழாக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஷாரூக் கானின் அடுத்த படம்: ஷாரூக் கானின் அடுத்த திரைப்படம் 'கிங்' ஆகும். இதை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, சுஹானா கான், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வார்சி, அபய் வர்மா மற்றும் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் தற்போது தயாரிப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கென்ட்ரா லஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரூக் கான் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் உண்மையில் இது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இல்லை என்றும், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இமேஜ் என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











