ஷாருக்கான், அட்லி படத்தின் தலைப்பு இதுதான்… வெளியானது மாஸான அப்டேட் !

மும்பை : பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லி இணையும் படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்தின் ப்ரீ புரோடக்ஷசன் பணிகளை படக்குழு புனேவில் தொடங்கி உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூனாவிலும் அடுத்த கட்டபடப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளது.

ராஜா ராணி

ராஜா ராணி

சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

தெறிக்கவிட்ட தெறி

தெறிக்கவிட்ட தெறி

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து படங்களை இயக்கினார்.

அட்லி ஷாருக்கான்

அட்லி ஷாருக்கான்

அட்லி ஷாருக்கானை வைத்து படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பணிகள் பூனேவில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பட தலைப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் ராணுவ அதிகாரி எனவும் கூறப்படுகிறது. எனவே படத்திற்கு 'ஜவான்' என்ற பெயரை படக்குழு தேர்வு செய்திருப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

படத்தின் தலைப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை அட்லி இயக்கியப் படங்களில் இதுவே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X