»   »  பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு

பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெண் பாடிகார்டுகளை பணியமர்த்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தில் பரம எதிரிகளான தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் உள்ளனர்.

அந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.

பாடிகார்ட்

பாடிகார்ட்

ஷாருக்கானுக்கு ஏற்கனவே பாடிகார்டுகள் உள்ளனர். இந்நிலையில் அவர் பெண் பாடிகார்டுகளை பணியமர்த்தியுள்ளார். ஷாருக்கான் காரணத்தோடு தான் இதை செய்துள்ளார்.

ரசிகைகள்

ரசிகைகள்

ஷாருக்கானுக்கு ரசிகைகள் ஏராளம் ஏராளம். அவர் செல்லும் இடம் எல்லாம் ரசிகைகள் அவரை மொய்த்துக் கொள்கிறார்கள். அவரின் கையைத் தொடுவது கட்டிப்பிடிப்பது என்று உள்ளனர் ரசிகைகள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ரசிகைகள் தன்னை மொய்க்கும்போது அவர்களை ஆண் பாடிகார்டுகளை விட்டு விலக்குவதை ஷாருக்கான் விரும்பவில்லையாம். பெண்களை மதிக்கும் நான் ஆண் பாடிகார்டுகளை வைத்து ரசிகைகளை விலக்குவது அநாகரீகம் என்கிறார் ஷாருக்.

நகக் கீரல்

நகக் கீரல்

ரசிகைகள் தன் கையை பிடிக்கும்போது அவர்களின் அழகான நகங்கள் கீரிவிடுவதாக கூறுகிறார் ஷாருக். வீட்டிற்கு சென்றால் நகக்கீரல் குறித்து மனைவி கேள்வி கேட்பதற்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. பெண் பாடிகார்டுகள் இருந்தால் நகக்கீரல் விழாமல் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார் ஷாருக்கான்.

English summary
Bollywood actor Shahrukh Khan has hired female bodyguards to save him from his lovely women fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil