»   »  நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்

நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஷாருக்கானின் கார் டயர் ஏறி பத்திரிகையாளர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர்.

ஆலியாவுடன் சேர்ந்து டியர் ஜிந்தகி படத்தில் நடித்த ஷாருக்கானும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பார்ட்டிக்கு வந்த ஷாருக்கானை புகைப்படம் எடுக்க அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முந்தியடித்துள்ளனர். அவர் காரில் இருந்து இறங்குவதற்குள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

கார்

கார்

ஷாருக்கானின் கார் டயர் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கால் மீது ஏறி இறங்கியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கி வந்த ஷாருக்கான் பத்திரிகையாளர்களை அமைதியாக இருக்குமாறு கூறினார்.

மருத்துவமனை

மருத்துவமனை

காயம் அடைந்த நபரை தனது காரில் தன் பாடிகார்டுடன் நானாவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த நபருக்கு தனது டாக்டர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஷாருக்கான் காயம் அடைந்த பத்திரிகையாளருக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த செயலால் பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
A media person got injured after Bollywood actor Shah Rukh Khan's car ran over his leg in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil