»   »  ஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் செல்லும் மாஸ் நடிகர்

ஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் செல்லும் மாஸ் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் பறக்கும் ஷாருக் கான்! - Sharukh Khan

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் சென்று வருகிறாராம்.

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப் ஹாரி மெட் செஜால் படம் ஓடவில்லை. அதனால் அவர் தனது அடுத்த படமான ஜீரோ ஹிட்டாக வேண்டும் என்று விரும்புகிறார்.

Shahrukh Khan uses helicopter to reach shootingspot

ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் ஜீரோ படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோரும் உள்ளனர். ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இரவு நேரத்தில் நடந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஷாருக்கான் படப்பிடிப்பு தளத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறாராம். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஷாருக்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

8ம் தேதி வரை இரவு நேரத்தில் தான் படிப்பிடிப்பு நடக்குமாம்.

English summary
Bollywood actor Shah Rukh Khan is using helicopter to reach his Zero shootingspot to avoid Mumbai traffic. Zero is being directed by Anand L. Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X