»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil


ஆபாசப் படத்தில் நடித்த வழக்கில் நடிகை ஷகீலா திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாளையங்கோட்டையில் ஒரு திரையரங்கில் மலையாளப் படத்துக்கு நடுவே புளூ பிலிம் பிட் ஓட்டப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த புளூ பிலிம் சுருளைக் கைப்பற்றினர்.

அதில் நடித்த ஷகீலா, மலையாள நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதாகாமல் தப்ப உயர் நீதிமன்றத்தில் ஷகீலா முன் ஜாமீன் வாங்கிவிட்டார்.

இந் நிலையில் இந்த வழக்கில் இன்று (21.06.04) ஆஜராகுமாறு ஷகீலாவுக்கு திருநெல்வேலி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத்துக்கு ஷகீலா வந்தார். தன் அடையாளம் தெரிந்துவிடாமல் இருக்க கருப்பு நிற புர்ஹா அணிந்து வந்திருந்தார் ஷகீலா.

கூடவே அடியாட்களும் வந்தனர். அவர்கள் ஷகீலாவை படமெடுக்க முயன்ற பத்திரிக்கை நிருபர்களைத் தடுத்தனர். நீதிமன்றத்துக்குள் சென்ற பின் அடையாளம் காண வேணடும் என நீதிபதி சொன்னதையடுத்து புர்ஹாவை அகற்றிவிட்டு முகத்தைக் காட்டினார் ஷகீலா.

இதையடுத்து வழக்கை ஜூலை 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைக்க, முகத்தை மூடியபடி வெளியே வந்தார் ஷகீலா.

அதற்குள் ஷகீலா வந்ததையறிந்து நீதிமன்றத்துக்கு வெளியே இளசுகளும், பெரிசுகளும் பெருமளவில் கூடிவிட்டனர். அவர்களிடம் இருந்து அடியாட்கள் உதவியோடு லாவகமாகத் தப்பி காரில் ஏறிப் பறந்தார் ஷகீலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil