Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விபத்து.. ஷகீலா மகளுக்கு முதுகில் காயம்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுக்கு என்ன ஆச்சு?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுடன் நடிகை ஷகீலாவின் மகள் மிலா காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமான ஒன்றாக வலம் வருகிறது.
அந்த சீரியலின் படப்பிடிப்புக்காக குமுளிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எக்குத்தப்பாக கேள்வி கேட்ட கணவர்…ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த நடிகை !

ஷகீலாவின் மகள்
முன்னாள் ஆபாச நடிகையான ஷகீலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். ஷகீலா திருநங்கையான மிலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஷகீலாவின் மகள் மிலா யூடியூப் சேனல்கள், சீரியல்கள் என அவரும் பிரபல நடிகையாக கலக்கி வருகிறார்.

மிஸ் ஆன பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 5ல் ஷகீலாவின் மகள் மிலா போட்டியாளராக கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில், திருநங்கை நமீதா மாரிமுத்து மட்டும் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மிலா கலந்து கொள்ளாததை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் மிலா கலந்து கொள்ளவில்லை.

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ் மற்றும் கம்பம் மீனா இருவருமே மிலாவின் நெருங்கிய தோழிகள். மூவரும் இணைந்து அடிக்கடி பல இடங்களுக்கு ஊர் சுற்றியுள்ளனர். இந்நிலையில், குமுளியில் நடைபெற்ற பாக்கியலட்சுமி ஷூட்டிங்கிற்கு மூவரும் செல்லும் போது தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார் விபத்து
குமுளி அருகே சென்று கொண்டிருந்த போது, இவர்கள் சென்ற காரை இன்னொரு கார் இடித்ததில் இந்த விபத்து நேர்ந்ததாக மிலா கூறியுள்ளார். கண்டெயினர் ஒன்று அந்த காரை இடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எங்கள் கார் மீது அந்த கார் மோதியது என்றும் கூறியுள்ளார். இவர்கள் சென்ற வெள்ளை நிற கார் முன்னும் பின்னும் அப்படியே அப்பளம் போல நொறுங்கிய போட்டோக்கள் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

முதுகில் காயம்
இதில் மற்ற யாருக்கும் பெரிய அடியோ காயமோ ஏற்படவில்லை என்றும், ஷகீலாவின் மகள் மிலாவுக்கு மட்டும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக அவரே ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த கார் விபத்து ரசிகர்களை பதற வைத்துள்ளது.