»   »  ஜெய் யில் நுழைக்கப்பட்ட ஷகீலா

ஜெய் யில் நுழைக்கப்பட்ட ஷகீலா

Subscribe to Oneindia Tamil

பிரஷாந்த் நடித்த ஜெய் படத்திலும் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்த சரவணன் படத்திலும் தணிக்கை குழுவெட்டிய காட்சிகளும் சேர்க்கப்பட்டு தியேட்டர்களில் காட்டப்பட்டு வருவது தொடர்பான பிரச்சனை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்குஎதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

எடுப்பார்களா என்பது வேறு விஷயம்.

இந் நிலையில், ஜெய் படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியபோது ஷகீலா நடித்த காட்சிகளே அதில்இடம்பெறவில்லையாம்.

தியேட்டர்களுக்கு தரப்பட்டபோது தான் அந்தக் காட்சிகள் நுழைக்கப்பட்டுள்ளன என்ற புதிய தகவல் வெளியாகியுளளது.

ஜெய் படம் 21 இடங்களில் சென்சார் போர்டிடம் வெட்டு வாங்கியது. ஆனால் தணிக்கைக் குழுவினர் தியேட்டரில்பார்த்தபோது, இவர்கள் கட் செய்ததில் 6 காட்சிகள் தவிர, மீதமுள்ள அனைத்தும் படத்தில் இடம் பெற்றிருந்தன.

அதோடு, கவர்ச்சி நடிகை ஷகீலா நடித்த காட்சிகள் புதிதாக இணைக்கப்பட்டிருந்தன. இக் காட்சிகள் தணிக்கைக்குபடம் அனுப்பப்பட்டபோது அதில் இடம் பெற்றிருக்கவில்லை.

அதிலும் ஷகீலாவை வர்ணித்து மகா ஆபாசமான வசனங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இக் காட்சிகளைக்கண்டு அதிர்ந்த தணிக்கைக் குழுவினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப் படங்கள்ஓடிய தியேட்டர்கள் காசி, சந்திரன், ருக்குமணி, ரக்சினி ஆகிய தியேட்டர் மானேஜர்களும், ஆபரேட்டர்களும்கைது செய்யப்பட்டனர்.

அதே போல புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் அபர்ணாவும் தனுஷும் மோதிக் கொள்வது போன்றகாட்சிகளிலும் மகா ஆபாசம் காட்டியிருக்கிறார் அபர்ணா. அதையும் தணிக்கை குழு வெட்டிவிட, மீண்டும் அதைச்சேர்த்தே தியேட்டர்களுக்குத் தந்திருக்கிறார்கள்.

  • நடிகர் தியாகராஜனுக்கு போலீஸ் வலைவீச்சு!
  • சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் ஓடும் தனுஷ், பிரஷாந்தின் படங்கள்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil