»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சாக்ஷி நடித்துள்ள படங்களை பார்த்திருக்கிறீர்களா? அதில் நடித்தது சாக்ஷி இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா?வேறு வழியில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை.

சாக்ஷியின் உண்மையான பெயர் ஷிபா. இவரது தங்கை ஷிகா. இருவரும் இரட்டைக் குழந்தைகள். உருவத்தில் இருவருக்கும்எந்த வேறுபாடும் கிடையாது. சாக்ஷி கொஞ்சம் பூசினார்போல இருப்பார். ஷிகா கொஞ்சம்..ஒல்லி. அவ்வளவு தான். ஆனால்,மிகவும் கூர்ந்துபார்த்தால் தவிர இந்த உருவ வேற்றுமை தெரியாது.

இதைப் பயன்படுத்தி சாக்ஷி பல தயாரிப்பாளர்களை ஏமாற்றியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. சாக்ஷி எனறு கூறிக்கொண்டு அவரது தங்கை தான் பல படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சாக்ஷி முதலில் அரவிந்த்சாமியுடன் தான் புதையல் படத்தில் அறிமுகமானார். டைரக்டர் செல்வா தான்இவரை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தையடுத்து பல தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, சொந்த மொழியான கன்னடம்ஆகியவற்றில் பல பட வாய்ப்புகள இவருக்கு வந்தன.

பார்க்க மிகுந்த அழகும் வணப்பும் கொண்ட சாக்ஷி கவர்ச்சியை தெலுங்கில் அள்ளி வீசினார். இதனால் அங்கு அதிக படங்கள்கிடைத்தன. ஆனால், கேட்டவர்களுக்கு எல்லாம் கால்சீட் கிடைத்தது. எப்படித்தான் இத்தனை படங்களை இவர் சமாளிக்கிறார்என பல நடிகைகளுக்கும் அவர்களின் மேனேஜர்களுக்கும் குழப்பம் இருந்து வந்தது. ஆனால், யாருக்கும் எந்த சந்தேகமும்வரவில்லை.

சமீபத்தில் கன்னட படத் தயாரிப்பாளர் யோகேஸ்வர் சைனிகா என்ற படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ள ஆந்திரா சென்று அங்குசாக்ஷியை சந்தித்து கால்சீட் கேட்டார். மிகவும் நல்ல முறையில் தயாரிப்பாளரை கவனித்துக் கொண்ட சாக்ஷி படத்தின் கதைஎல்லாம் கேட்டார். பின்னர் பெரும் தொகையை அட்வான்சாக வாங்கிக் கொண்டு கால்சீட்டை அள்ளித் தந்தார்.

படப்பிடிப்பும் தொடங்கியது. கர்நாடகாவில் குந்தாபுராவில் சூட்டிங் நடந்த இடத்துக்கு தயாரிப்பாளர் சென்றார். அங்கு இருந்தநடிகை சாக்ஷி (!) தயாரிப்பாளரை அடையாளம் கண்டுகொள்ளவே இல்லை. தன்னிடம் நன்றாக பேசி அட்வான்ஸ் வாங்கியநடிகை ஏன் உம்... என்று உட்கார்ந்து இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தயாரிப்பாளர் தவித்தார்.

மிகவும் குழம்பிப்போன அவர் மறுநாள் சூட்டிங் சென்றபோது தான் தன் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது சாக்ஷி இல்லை,அவரது உருவத்தில் உள்ள சகோதரி என்ற விவரம் அவருக்குத் தெரியவந்தது.

சூட்டிங் ஸ்பாட்டில் செல்போனில் தனது தாயுடன் பேசிக் கொண்டிருந்த போலி சாக்ஷி, அக்காவுக்கு சூட்டிங் முடிந்துவிட்டதாசெல்போனில் கேட்க, தயாரிப்பாளர் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார். அப்போது தான் தெரிந்தது தன் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது சாக்ஷியின் தங்கை என்று.

ஆனால், அதை உடனடியாக வெளியே காட்டிக் கொள்ளாத தயாரிப்பாளர் சாக்ஷியின் நண்பர்களைப் பிடித்து சாக்ஷியின் குடும்பபோட்டோவை வாங்கினார். அதைப் பார்த்தவுடன் தான தயாரிப்பாளரின் சந்தேகம தீர்ந்தது.

படத்தில் தனது தந்தை சிவானந்தத்துடன் ஒரு பக்கம் ஒரிஜினல் சாக்ஷியும் மறுபக்கம் அவரது தங்கை ஷிகாவும்நின்றிருக்கின்றனர். ஆனால், அந்த இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. ஒரே உருவம் தான்.

வெறுத்துப் போன தயாரிப்பாளர் இவர் என்னை மட்டுமல்ல, பல தயாரிப்பாளர்களை ஏமாற்றியுள்ளார் என புலம்பி வருகிறார்.
ஆமாம், வாஞ்சிநாதனில் விஜயகாந்துடன் நடித்தது யார்? உங்களுக்கு ஏதாவது புரியுதா.

சினிமாவுக்கு பிலிம் காட்டியுள்ளார் சாக்ஷி என்ற ஷிபா என்ற ஷிகா.!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil