»   »  ஜீவன் நடிக்கும் ஷக்தி சிதம்பரம் படத்திற்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்!

ஜீவன் நடிக்கும் ஷக்தி சிதம்பரம் படத்திற்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கெளதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன்.

அதையடுத்து ஹீரோவாகி விட்ட அவர் 'திருட்டுப்பயலே', 'நான் அவன் இல்லை' படங்கள் மூலம் பிரபலமானார்.

ஆனால். அவர் கடைசியாக நடித்த 'கிருஷ்ணலீலை' படம் வெளியாகாததால் அதையடுத்து சில வருடங்களாக அவருக்கு படங்கள் இல்லை.

ஜெயிக்கிற குதிரை :

ஜெயிக்கிற குதிரை :

'அதிபர்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த ஜீவன், தற்போது சத்யராஜ், பிரபு ஆகியோரை வைத்து காமெடி படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'ஜெயிக்கிற குதிர' என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

மூன்று கதாநாயகிகள் :

மூன்று கதாநாயகிகள் :

இந்தப் படத்தில் ஜீவனுடன் டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜெயப்பிரகாஷ், விஜய், கோவை சரளா, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன்பாப் ஆகியோர் நடிக்கின்றனர்.

நட்சத்திரப் பட்டாளம் :

நட்சத்திரப் பட்டாளம் :

மேற்கண்டவர்கள் தவிர யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதைக்களம்

கதைக்களம்

'ஜெயிக்கிற குதிர' படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், 'முடியாது என்பது முட்டாள்தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள்தான் கதைக் களம்' எனக் கூறியிருக்கிறார்.

 சென்சார் போர்டு :

சென்சார் போர்டு :

இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. அப்போது படத்தைப் பார்த்தவர்கள், சில காட்சிகளை கத்தரிக்கச் சொன்னார்களாம். அப்படியில்லையென்றால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தான் கொடுப்போம் என்றார்களாம்.

'ஏ' சான்றிதழ் :

'ஏ' சான்றிதழ் :

ஆனால் அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினால் முக்கிய கதையம்சமே போய் விடும் என்பதால் 'ஏ' சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை என்று வாங்கி விட்டாராம் ஷக்தி சிதம்பரம். இதையடுத்து அடுத்த மாதம் இறுதியில் 'ஜெயிக்கிற குதிர' படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

English summary
Jeevan is a hero who is known for 'Thiruttu payale' and 'Naan avan illai'. Jeevan has acted as a hero in the film 'Jaikira Kuthirai' by Shakthi Chidambaram.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil