»   »  வாரிசு நடிகையை அந்த ஹீரோ வீட்டில் இருந்து தரதரவென இழுத்துச் சென்றாரா தந்தை?

வாரிசு நடிகையை அந்த ஹீரோ வீட்டில் இருந்து தரதரவென இழுத்துச் சென்றாரா தந்தை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து தனது மகளும், நடிகையுமான ஷ்ரத்தா கபூரை தரதரவென இழுத்து வந்ததாக வெளியான தகவல் குறித்து நடிகர் சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தன்னுடன் 15 ஆண்டு காலமாக வாழ்ந்த மனைவி அதுனாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். ஃபர்ஹானுக்கும், நடிகை ஷ்ரத்தா கபூருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பே விவகாரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு ஃபர்ஹானின் விவாகரத்திற்கு நடிகை அதிதி ராவ் ஹைதரி காரணம் என்றார்கள்.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

ஃபர்ஹான் அக்தருடன் ஷ்ரத்தா கபூரின் பெயர் தான் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷ்ரத்தா ஃபர்ஹானின் வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழச் சென்றார் என்று கூறப்பட்டது.

சக்தி கபூர்

சக்தி கபூர்

ஷ்ரத்தாவின் லிவ் இன் முறை முடிவு அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூருக்கு பிடிக்கவில்லை என்றும் இதையடுத்து அவர் ஃபர்ஹான் வீட்டிற்கு சென்று மகளை தரதரவென இழுத்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இல்லை

இல்லை

கோவாவுக்கு சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். ஃபர்ஹான் வீட்டில் இருந்து ஷ்ரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆதித்யா ராய் கபூர்

ஆதித்யா ராய் கபூர்

முன்னதாக என் மகளையும், நடிகர் ஆதித்யா ராய் கபூரையும் சேர்த்து வைத்து பேசினார்கள். நான் ஃபர்ஹானை மதிக்கிறேன். அவர் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர். என் மகளுக்கு யாரையாவது பிடித்திருந்தால் என்னிடம் நிச்சயம் தெரிவிப்பார் என்கிறார் சக்தி கபூர்.

English summary
Bollywood actor Shakti Kapoor has reacted to the news that he dragged his actress daughter Shraddha from actor Farhan Akhtar's house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil