“யப்பா இது ராவணன் இல்லப்பா.. அலாவுதீன் கில்ஜி”: ஆதிபுருஷ் டீசரை கலாய்த்த சக்திமான் நடிகர்!

மும்பை: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது.

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில் சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆதிபுருஷ் டீசருக்கு வந்த சோதனை

ஆதிபுருஷ் டீசருக்கு வந்த சோதனை

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்தப் படம் 2023 ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். கிராபிக்ஸ் காட்சிகள், பிரபாஸ், சைஃப் அலிகானின் தோற்றம் என டீசரில் இருக்கும் அனைத்தையும் வச்சி செய்து வருகின்றனர். இதற்கு இயக்குநர் ஓம் ராவத், பிரபாஸ் இருவருமே விளக்கம் கொடுத்திருந்தனர்.

ராவணனாக சைஃப் அலிகான்

ராவணனாக சைஃப் அலிகான்

ஆதிபுருஷ் படத்தில், பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் சைஃப் அலிகானை ராவணனாக நடிக்க வைத்ததற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்லாமிய நடிகரான சைஃப் அலிகான் எப்படி ராவணனாக நடிக்கலாம் எனவும் சர்ச்சைகள் கிளம்பின. அதேபோல், ஹனுமான் தோல் ஆடை அணிந்திருப்பதா என்றும் கேள்விகள் எழுந்தன. இதனால், ஆதிபுருஷ் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்த பிரபாஸ் ரசிகர்கள் செம்ம கடுப்பாகிவிட்டனர். .

கோபமான சக்திமான் நடிகர்

கோபமான சக்திமான் நடிகர்

இந்நிலையில், ஆதிபுருஷ் டீசரை சக்திமான் நடிகர் முகேஷ் செம்ம பங்கமாக கலாய்த்துள்ளார். எந்த கருத்துகளையும் ரொம்பவே துணிச்சலாக பேசிவிடும் முகேஷ் கண்ணா, ஆதிபுருஷ் டீசர் குறித்து தனது 'Bheeshm International' யூடியூப் சேனலில் வெளுத்து வாங்கியுள்ளார். அதில், ஆதிபுருஷ் டீசரில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்பு கேள்விக்குரியதாக உள்ளன. எந்த பாத்திரங்களும் இயல்பாகவே இல்லை எனக் கூறியுள்ளார். மேலும், "உங்கள் படத்தை மாற்றுவதை எங்களால் தடுக்க முடியாது. உங்களிடம் 400 - 600 கோடி இருந்தால், நீங்கள் செலவுசெய்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம், ஆனால் பாத்திரங்களின் தோற்றத்தை மாற்றினால் மட்டும் தான் உங்கள் படம் மாறும். ராமாயணத்தை உருவாக்குகிறீர்கள் என்று மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுகின்றனர். இதுபோன்ற படம் எடுக்கிறீர்கள் என்றால், கதையின் பிம்பத்தையும் பார்வையாளர்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்" எனக் காட்டமாக பேசியுள்ளார்.

சைஃப் அலிகானுக்கு குட்டு

சைஃப் அலிகானுக்கு குட்டு

தொடர்ந்து பேசியுள்ள முகேஷ் கண்ணா, ராவணன் கேரக்டரில் நடித்துள்ள சைஃப் அலிகான் குறித்தும் விமர்சித்துள்ளார். அதில், சைஃப் அலிகானின் ராவணன் தோற்றம் முகமது கில்ஜியைப் போல உள்ளது, அது ராவணனைப் போல இல்லை. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறாது, மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பும். VFX மூலம் அல்லது ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயணத்தை உருவாக்க முடியாது. ஆதிபுருஷ் படத்தை ராமாயணம் என சொல்வதை நிறுத்துங்கள்" என கடுமையாக பேசியுள்ளார். ஏற்கனவே ஆதிபுருஷ் திரையரங்குகளில் வெளியாகும் போது எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது முகேஷ் கண்ணாவின் கடுமையான விமர்சனம் படக்குழுவை கதிகலங்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X