»   »  'நெருப்போடு விளையாடுவான் சக்திமான்'...மீண்டு(ம்) வருகிறார் சக்திமான்

'நெருப்போடு விளையாடுவான் சக்திமான்'...மீண்டு(ம்) வருகிறார் சக்திமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இடையில் சிலகாலம் காணாமல் போயிருந்த சக்திமான், விரைவில் தொலைக்காட்சிகளில் தோன்றவிருக்கிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூர்தர்ஷனில் தோன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்த சக்திமான் தொடர் இடையில் சிலவருடங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சக்திமான் வேடத்தில் நடித்த முகேஷ் கண்ணா மீண்டும் சக்திமானாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Shaktimaan Return to Television

தூர்தர்ஷன்

'சக்தி சக்தி சக்திமான்' என்று வாராவாரம் தூர்தர்ஷனில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்த தொடர் சக்திமான். அக்காலத்தில் இந்தத் தொடரை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்தளவிற்கு சுண்டுவிரலால் அனாயசமாக பூமி, சூரியனைத் தூக்கி சிறுவர்களை சக்திமான் குஷிப்படுத்தினார்.

15 வருடங்கள்

இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து இந்தத் தொடரை மீண்டும் சின்னத்திரையில் எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இப்போதும் சக்திமான் தொடருக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு இருக்கும் என்பதால் இத்தொடரைத் தயாரிப்பதில் முன்னணி டிவி நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

முகேஷ் கண்ணா

சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா(57) இதுகுறித்து '' இந்தக் கதாபாத்திரத்தில் நான் மீண்டும் நடிக்கவிருக்கிறேன். இதற்காக எனது உடல் எடையைக் குறைத்து வருகிறேன். தற்போது 8 கிலோ வரை என்னுடைய உடல் எடையைக் குறைத்திருக்கிறேன். மேலும் 8 கிலோ எடையைக் குறைத்திடவும் திட்டமிட்டுள்ளேன்.

விரைவில்

இப்போதைக்கு என்னால் திட்டவட்டமாக தேதியை சொல்ல முடியாது. ஆனால் விரைவில் சக்திமான் சின்னத்திரைக்கு வருவது உறுதி என்று கூறியிருக்கிறார். மேலும் நிறைய நடிகர்கள் சக்திமான் தொடரில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். ஆனால் வேறு யாருக்கும் இந்தக் கதாபாத்திரத்தை என்னால் விட்டுத்தரமுடியாது'' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த செய்தி சக்திமான் ரசிகர்களை தற்போது அளவற்ற உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Sources said Fame 'Shakatimaan' Serial Is Back to Television Channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil