திரெளபதி படம் பார்த்த ஷாலினி அஜித்.. தம்பிக்கு பாராட்டு.. என்ன கதை இப்படி போகுது!

சென்னை: தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, திரெளபதி திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துள்ளதாக புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் ஜி. மோகன் தயாரித்து, இயக்கியுள்ள திரெளபதி திரைப்படம் நேற்று வெளியானது.

நாடக காதலை தோலுரித்துக் காட்டியுள்ள இந்த படத்திற்கு, ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

ஷாலினி தம்பி

ஷாலினி தம்பி

ஜி. மோகன் இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரிச்சர்டு ரிஷி நடிகை ஷாலினியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், காதல் வைரஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

நாடக காதல்

நாடக காதல்

குறிப்பிட்ட ஒரு சாதியினரை வில்லன்களாக சித்தரித்து, அசுரன், பரியேறும் பெருமாள், கன்னி மாடம், காதல் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இந்நிலையில், மோகன் இயக்கத்தில், ரிச்சர்ட் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் அதற்கு நேர் மாறாக நாடக காதலை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

அரசியல் ஆதரவு

அரசியல் ஆதரவு

நேற்று வெளியான திரெளபதி திரைப்படத்தை பாஜகவை சேர்ந்த எச். ராஜா, காயத்ரி ரகுராம் மற்றும் பாமகவை நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி உள்ளனர். நேற்று டிரெண்டிங்கிலும் இந்த படம் தான் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

உண்மையா.. பொய்யா

ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியாகி உள்ள திரெளபதி திரைப்படத்தை நடிகர் அஜித் பார்த்து பாராட்டியதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவை சமூக வலைதளங்களில் கொடுத்து டிரெண்ட் செய்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

படம் பார்த்த ஷாலினி

நடிகர் அஜித் இந்த படத்தை பார்த்தார் என்றும், பார்க்கவில்லை என்றும் இரு விதமான கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது தம்பி ரிச்சர்ட் நடித்துள்ள திரெளபதி படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தனது குடும்பத்தாருடன் பார்த்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X