அசிங்கப்பட்ட அசல் கோளார்..நடத்தை சரியில்லையே..என்று சிக்குவாரோ?

அசல்கோளார் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தது முதல் அவரது நடத்தை சரியில்லாததாக உள்ளது. பேச்சும் சரியில்லாமல் உள்ளது.

சராசரியாக ஒரு பெண்ணிடம் பழகுவதுபோல் அல்லாமல் தொட்டு தொட்டு பேசுவது நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகிறது.

இதில் ஷிவின் கதை சொல்லும் டாஸ்கில் பேசும்போது அவசரப்பட்டு பஸ்ஸரை அழுத்தி பின்னர் அவமானப்பட்டார்.

ஸ்ட்ராங்காக நிற்கும் திருநங்கை போட்டியாளர்

ஸ்ட்ராங்காக நிற்கும் திருநங்கை போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு விதமான இடங்களிலிருந்து வருவதை ஒவ்வொரு சீசனிலும் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கம், சினிமா, சின்னத்திரை சார்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் மட்டுமே சாதாரண நிலையில் இருந்து வருபவர்களாக இருப்பார்கள் இதனால் பல விதமான கலவையான ஒரு வீட்டை ஒவ்வொரு சீசனிலும் பார்த்திருக்கிறோம். கடந்த முறை திருநங்கை நமிதா பங்கேற்றார். ஆனால் திடீரென இரண்டு நாளிலேயே அவர் போட்டியை விட்டு வெளியேறினார். ஆனால் இம்முறை திருநங்கை ஒருவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டபோது அவரும் போட்டியில் பங்கேற்க முடியாமல் பாதையில் வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஹவுஸ்மேட்ஸ்களால் ஒதுக்கப்பட்ட ஷிவின் கணேசன்

ஹவுஸ்மேட்ஸ்களால் ஒதுக்கப்பட்ட ஷிவின் கணேசன்

மாடலிங், ஐடி துறையைச் சேர்ந்த ஷிவின் கணேசன் பிக் பாஸ் போட்டிக்குள் நுழைந்தது பொதுமக்கள் சார்பாக உள்ள கேட்டகிரியில். அதற்கு முன்பு ஷிவின் கணேசன் யார் என்று யாருக்கும் தெரியாது. பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் வந்தது முதல் அவருடைய உறுதியான நடத்தை மற்றவர்களை எதிர்கொள்ளும் விதம் வீட்டில் உள்ள அனைவருக்கும் எரிச்சலை தந்தது. ஒருவித ஒதுக்குதல் அவருக்கு எதிராக நடந்தது என்று சொல்லலாம். ஹவுஸ் மேட்ஸ்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ஷிவின் கணேசனை ஓரங்கட்டும் வேலையும் நடந்தது. இந்நிலையில் ஷிவின் கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக ஹவுஸ்மேட்ஸ்களின் நட்பை பெற்று வருகிறார் என்று சொல்லலாம்.

ஷிவின் கணேசன் சோகக்கதை

ஷிவின் கணேசன் சோகக்கதை

நேற்று நடந்த டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார் நிலையில் இன்று கதை சொல்லும் டாஸ்கெட் சிவிங் கணேசன் பங்கேற்றார் ஒரு நிமிடத்திற்குள் அவரது கதை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மூன்று ஹவுஸ் மேட்ச்கள் பட்டனை அழுத்தினால் அவர் கதையை நிறுத்தி விட வேண்டும் ஆனால் ஷிவின் தன் கதையை சொல்ல ஆரம்பித்தவுடன் அனைவரும் மௌனமாக இருந்தேன் இருந்தார்கள் பன்னிரண்டாவது நொடியிலேயே கோலார் பட்டனை அழுத்தினார் ஆனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் பட்டனை அழுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஷிவின்கணேசன் தன்னுடைய கதையை சொல்ல ஆரம்பித்தார், தந்தையின் தற்கொலை, தாயார் தனிமரமாக இருந்து தன்னை காப்பாற்றியது, தான் பாலின மாற்றம் அடைந்ததை கண்டு ஒதுக்காமல் தனது தாயார் உதவி செய்ததையும் தான் படித்து ஆளானதையும் சொன்னார்.

சிக்கலில் சிக்கப்போகும் அசல் கோளார்

சிக்கலில் சிக்கப்போகும் அசல் கோளார்

ஷிவின் கதையை சொல்லி முடித்தவுடன் ஹவுஸ்மேட்ஸ் அமைதியாக இருந்தார்கள். அவர் வெளியில் லிவிங் ஏரியாவிற்கு வருவதற்குள் அவரை தேடிச் சென்று வாழ்த்தினார் மைனா. ஷிவினுக்கு எதிராக பஸ்ஸ்ரை அழுத்திய அசல் கோளாருக்கு மற்றவர்கள் ஷிவினை வாழ்த்துவதைப்பார்த்து அவமானமாக போய்விட்டது. கைகொடுத்து வாழ்த்துக்குட சொல்லாமல் அசீமிடம் ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தார். அசீம், ஜனனி உள்ளிட்டோரு ஷிவினுக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தனர். அசல் கோளார் தொடர்ச்சியாக பெண்களிடம் மட்டும் பேசுவது, வம்பிழுப்பது என இருக்கிறார். இது சாதாரணமாக போகும்வரை பிரச்சினை இல்லை யாராவது பிரச்சினை கிளப்பினால் சிக்கலாகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X