»   »  வீரசிவாஜியில் விஜய் ரசிகையாக நடிக்கும் அஜித் மைத்துனி!

வீரசிவாஜியில் விஜய் ரசிகையாக நடிக்கும் அஜித் மைத்துனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படத்தில் ஷாமிலி விஜய் ரசிகையாக நடிக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கிய பேபி ஷாமிலி, தற்போது தனுஷின் பெயரிடப் படாத படத்திலும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.


இந்நிலையில், வீரசிவாஜி படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.


விஜய் புகைப்படம்...

விஜய் புகைப்படம்...

அதில், ஒரு புகைப்படத்தில் ஷாமிலி ஓட்டும் இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் நடிகர் விஜயின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. காரணம் படத்தில் விஜயின் ரசிகையாக வருகிறாராம் ஷாமிலி.


ரசிகை...

ரசிகை...

மேலும் படத்தின் முக்கியமான காட்சியே இந்த விஜய் படத்தை வைத்துதான் என படக்குழுவினர் கூறுகின்றனர். ஷாமிலி விஜயின் ரசிகை என்பதை அழுத்தமாகக் கூறுவது போல் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.


இது தான் கதை...

இது தான் கதை...

நாயகனுக்கும் ஒரு குழந்தைக்கும் நடக்கும் பாசப்பிணைப்பை மையப்படுத்தியது தான் வீரசிவாஜியின் கதையாம். ஆனால், இதில் காதல், ஆக்‌ஷன், காமெடி என எல்லாம் கலந்து இருக்குமாம்.


படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


அஜீத் மைத்துனி...

அஜீத் மைத்துனி...

சமூகவலைதளங்களில் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்க வீரசிவாஜியின் விஜய் ரசிகையாக வரும் ஷாமிலி, ஷாலினியின் தங்கை மற்றும் அஜித்தின் மைத்துனி என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
We have already reported the comeback of Baby Shamilee, this time as the leading lady opposite Vikram Prabhu in Veera Sivaji. It is heard that Shamili will appear as an ardent Vijay fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil