»   »  சூப்பர் ஸ்டாராகும் பஸ் கண்டக்டர் தனுஷ்: ரஜினியின் வாழ்க்கை தான் 'ஷமிதாப்' கதையா?

சூப்பர் ஸ்டாராகும் பஸ் கண்டக்டர் தனுஷ்: ரஜினியின் வாழ்க்கை தான் 'ஷமிதாப்' கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனுஷ் நடித்துள்ள ஷமிதாப் இந்தி படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தெரிவிக்கும் படம் என்று கூறப்படுகிறது.

ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்ற தனுஷ் இந்தி பேசும் மக்களின் மனதை நடிப்பால் கவர்ந்தார். தற்போது அவர் ஆர். பால்கி இயக்கத்தில் நடித்துள்ள இந்தி படம் தான் ஷமிதாப். படத்தில் அமிதாப் பச்சன், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகிறது.

தனுஷ்

தனுஷ்

ஷமிதாப் படத்தில் தனுஷ் தனது தாயின் வழியில் பேருந்து நிலையத்தில் திண்பண்டங்கள் விற்கிறாராம். அதன் பிறகு அவர் பஸ் கண்டக்டர் ஆகிறாராம்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

பஸ் கண்டக்டராக உள்ள தனுஷ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆவதே ஷமிதாப் படத்தின் கதையாம்.

அமிதாப்

அமிதாப்

ஷமிதாப் படத்தில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளார். அவருக்கு வாய்ஸ் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

ரஜினி கதை

ரஜினி கதை

ரஜினிகாந்த் தான் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்தார். அதன் பிறகு கோலிவுட் வந்து பெரிய சூப்பர்ஸ்டார் ஆனார். அப்படி என்றால் ஷமிதாபின் கதை ரஜியின் வாழ்க்கை வரலாறா?

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷமிதாப் படத்தில் நடிக்குமாறு பால்கி முதலில் ஷாருக்கானை தான் கேட்டாராம். அதன் பிறகே அந்த வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்துள்ளது என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

English summary
Is the stroyline of Dhanush's Shamitabh is inspired by his father-in law Rajini's life.
Please Wait while comments are loading...