»   »  ட்விட்டரில் புலியையும், வேதாளத்தையும் பின்னுக்குத்தள்ளிய ஷாம்லி

ட்விட்டரில் புலியையும், வேதாளத்தையும் பின்னுக்குத்தள்ளிய ஷாம்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் புலி மற்றும் வேதாளம் ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி ஷாம்லி பெயரிலான ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ட்விட்டரில் விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் புலி பட டிரெய்லர் கொண்டாட்டம் #PuliTrailer2Celebrations என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் 4வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அஜீத்தின் வேதாளம் படம் பற்ற பலரும் ட்வீட் செய்வதால் #Vedhalam என்ற ஹேஷ்டேக் 5வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஷாம்லி

ஷாம்லி

புலியும், வேதாளமும் 4வது, 5வது இடங்களில் டிரெண்டாகிக் கொண்டிருக்கையில் நடிகை ஷாம்லி அதாங்க அஜீத்தின் மச்சினச்சியின் பெயர் 2வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அடடா அதிசயம்

அடடா அதிசயம்

இது என்ன அதிசயம், புலியையும், வேதாளத்தையும் ஷாம்லி தோற்கடித்துவிட்டாரே என்று பார்த்தால் அதற்கு காரணம் அஜீத் தான். அஜீத் ஷாம்லியை எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ட்வீட் செய்வதால் #Shamlee என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜீத்

அஜீத்

மீண்டும் நடிக்க வந்துள்ள ஷாம்லியை வைத்து அஜீத் தான் போட்டோஷூட் நடத்தினார். அவர் அருமையாக போட்டோக்கள் எடுத்துள்ளதாக ஷாம்லி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

போட்டோ

#Shamlee போட்டோஷூட் ஸ்டில்ஸ் #AjithkumarPhotography என தினேஷ் ட்வீட் செய்துள்ளார். இவரைப் போன்று பலரும் ஷாம்லியின் போட்டோக்களுடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.

English summary
#Shamlee is trending at second place in Twitter and that too on national level. #PuliTrailer2Celebrations and #Vedhalam are on 4th and 5th places respectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil