»   »  புத்தனின் சிரிப்பு... கோபக்கார சமுத்திரக்கனியின் சாட்டையடி வசனங்கள்!

புத்தனின் சிரிப்பு... கோபக்கார சமுத்திரக்கனியின் சாட்டையடி வசனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில சினிமாக்களின் தலைப்பே கவனம் ஈர்க்கும். அப்படித்தான் ‘புத்தனின் சிரிப்பு' என்ற திரைப்படமும். அணுகுண்டு சோதனைக்கே 'சிரிக்கும் புத்தர்' என்று பெயர் வைத்தவர்கள் நம்மவர்கள். அதே அணுகுண்டு போல வீரியம் மிக்க வசனங்களோடு வெளியாக உள்ளது புத்தனின் சிரிப்பு திரைப்படம்.

"ஏர் உழுது சோறு போட்டவன் எலிக்கறி சாப்பிடறான்" என்பதில் தொடங்கி "தீவிரவாதிகளையும், தீவிரவாத செயலையும் விட கொடூரமானது ஒரு நல்லவனின் அமைதி" என்பது சாட்டையடி வசனங்கள் இடம்பெற்றுள்ள படம் புத்தனின் சிரிப்பு.

சமுத்திக்கனி

சமுத்திக்கனி

ஆசிரியராக, அப்பாவாக, வில்லனாக நடித்த சமுத்திரக்கனி இதில் ஆக்ரோசமாக சாட்டையடி வசனங்களை உமிழ்கிறார்.

மகேஷ் - மித்ரா குரியன்

மகேஷ் - மித்ரா குரியன்

அங்காடித்தெரு மகேஷ், மித்ரா குரியன் ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தினை விக்டர் டிவேட்சன் இயக்கியுள்ளார். பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் கொண்ட மகேசுக்கு இந்தப்படமாவது கை கொடுக்குமா பார்க்கலாம்.

கல்யாணக் களை

கல்யாணக் களை

மித்ரா குரியனின் அழகு மிளிர்கிறது. காரணம் கல்யாண களையாம். அம்மணியில் சீக்கிரம் டும் டும் டும் கொட்டப்போகிறார்களாம்.

புது ஜோடி யாரு

புது ஜோடி யாரு

புத்தனின் சிரிப்பில் புது ஜோடி ஒன்று இணைந்துள்ளது. காதலும் கவர்ச்சியும் அந்த ஜோடிக்கு பஞ்சமில்லை.

விவேக் வசனம்

விவேக் வசனம்

நகைச்சுவை நடிகர் விவேக் வசனமும் கவனம் ஈர்க்கிறது. ஒருத்தன் ஏழையாக பிறப்பது அவனோட தப்பில்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறப்பதுதான் அவனது தப்பு என்கிறார் விவேக்.

சமூக அக்கறை படம்

சமூக அக்கறை படம்

சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் படமாக வரவுள்ள இத்திரைப்படத்திற்கு அலி மிர்ஷாக் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. புத்தர் சிரித்தாரா என்று படம் வெளியான பின்னர்தான் தெரியும்.

English summary
Buddhanin Sirippu is a Tamil movie with production by Suresh Sakaria, direction by Victor Davidson. The cast of Buddhanin Sirippu includes Samuthirakani, Angadi Theru Magesh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil