Just In
- 2 hrs ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 2 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 2 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 3 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
படத்துல ஆர்வம் காட்டவே மாட்டேங்கிறாரே... சீனு ராமசாமி படத்தில் இருந்து சர்ச்சை ஹீரோ தடாலடி நீக்கம்
சென்னை: சீனுராமசாமி இயக்கும் படத்தில் இருந்து இளம் ஹீரோ நீக்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி,
ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கெட்டப் மாற்றி
இதனால், வெயில் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம். இந்நிலையில், திடீரென மீண்டும் புதிய கெட்டப்புக்கு மாறினார் நிகம். ஆத்திரமடைந்த ஜார்ஜ், மீண்டும் புகார் செய்தார்.

தரக்குறைவாக
விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம், திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்கிடையே தயாரிப்பாளர்களை மன நோயாளிகள் என்பது போல ஷேன் நிகம் தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது.

மன்னிப்பு கடிதம்
கோபமடைந்த கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, தடை தொடரும் என்று அறிவித்தனர். இதற்கிடையில், தான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஷேன். பின்னர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு கடிதம் அனுப்பினார்.

நடிகர் சங்கம்
இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் செயற்குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் பிரச்னை சுமூகமாக முடிக்கப்பட்டது. அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை பிரச்னை இல்லாமல் முடித்துக்கொடுப்பார் என்று தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் உறுதியளித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

சீனு ராமசாமி
இந்நிலையில், அவர் தமிழில் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். இதில் அவர் இலங்கை தமிழராக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் நடிக்க ஷேன் நிகாம் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது.

நீக்கிவிட்டனர்
இயக்குனரிடம் கதை பற்றி கேட்கவோ, படக்குழுவுக்கு ஒத்துழைப்போ அவர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை அப்படியே நீக்கிவிட்டு படக்குழு வேறு ஹீரோவிடம் பேசி வருகிறது. சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' படத்தில் நடித்த நடிகர் விஸ்வாவிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர். ஷேன் நிகாமுக்கு பதிலாக அவர் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது.