»   »  'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்!

'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்

சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'பத்மாவத்'. பல எதிர்ப்புகளைச் சந்தித்து, தடை முயற்சிகளை நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கொண்டு நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது 'பத்மாவத்'.

கர்ணி சேனா அமைப்பினரும், இந்து முன்னணியினரும் போராட்டத்திற்கான காரணமாகக் கூறியதைப் போல 'பத்மாவத்' படத்தில் எந்தக் காட்சியும் இடம்பெறவில்லை. ஆனாலும், தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Shankar about padmaavat

பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமான 'பத்மாவத்' படம் தற்போது வெளியாகி நல்ல வசூல் ஈட்டி வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு அது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 'அற்புதமான காட்சியமைப்புடன் என்கேஜ் செய்கிறது' என ஷங்கர் பத்மாவத் படத்தை பாராட்டியுள்ளார்.

படத்தில் நடித்தவர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டிய ஷங்கர் 'கூமார்' பாடலை 'வாவ்... வாட்டே சாங்' எனப் புகழ்ந்துள்ளார். ஷங்கர் ரசிகர்களும், அவரது ட்வீட்டில் பத்மாவத் படத்தைப் பாராட்டி கமென்ட் செய்துள்ளனர்.

English summary
Director Shankar looks at Padmaavat and commented on Twitter. Shankar praised Padmaavat as 'Engaging with amazing visuals'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil