»   »  தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்க!- கதறும் பிரமாண்ட இயக்குநர்

தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்க!- கதறும் பிரமாண்ட இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி மிக மிக அதிகம். தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்க என்று மன்றாடியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கர்.

ஜுலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிய நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக விற்கப்படும் டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரியையும் தமிழக அரசு விதித்துள்ளது.

Shankar appeals to save Cinema

மொத்தத்தில் 48 லிருந்து 58 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமா அனுபவித்திராத சுமை இது.

இதனால் தமிழ் சினிமா கடுமையாக பாதிக்கப்படும் என கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகின்றனர். இந்நலையில், பிரபல இயக்குனராக ஷங்கர், தமிழ் சினிமாவிற்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் கூறுகையில், "48 முதல் 58 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது மிக மிக அதிகம். தமிழ் சினிமாவைக் காப்பாற்றுங்கள்," என்று பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இந்தப் படம் ரிலீசாகவிருக்கிறது.

English summary
Top director Shankar has appealed to save Tamil cinema from GST impact

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil