»   »  செய்தியாளர் மீது தாக்குதல்: மீடியாவை கூட்டி வருத்தம் தெரிவித்தார் ஷங்கர், வழக்கு வாபஸ்

செய்தியாளர் மீது தாக்குதல்: மீடியாவை கூட்டி வருத்தம் தெரிவித்தார் ஷங்கர், வழக்கு வாபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அந்த இடத்தில் படப்பிடிப்பு வாகனங்கள் ஏராளமாக நின்றன.

இதை பார்த்த செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

கைது

செய்தியாளர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஐஸ்அவுஸ் போலீசார் ஷங்கரின் உறவினர் பப்புவை கைது செய்தனர். இதையடுத்து ஷங்கர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

வருத்தம்

வருத்தம்

படப்பிடிப்பு தளத்தில் தாக்குதல் நடந்தது எனக்கு தெரியாது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று ஷங்கர் தெரிவித்தார்.

படக்குழு

படக்குழு

படப்பிடிப்பை எங்கு நடத்தினாலும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் படக்குழுவினரிடம் எப்பொழுதுமே கூறுவதுண்டு என்றார் ஷங்கர்.

வழக்கு வாபஸ்

வழக்கு வாபஸ்

ஷங்கர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யாரையும் கைது செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்றது செய்தியாளர் தரப்பு.

English summary
Shankar appologises to media persons Director Shankar has said sorry for the unfortunate incident that happened on the shootingspot of his upcoming movie 2.0 starring Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil