Don't Miss!
- News
‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ராஜா ராணி கனெக்ஷன் இருக்கே.. நயன்தாரா 75வது படத்தை இயக்கப் போறது யார் தெரியுமா?
சென்னை: டிவியில் விஜேவாக இருந்த டயானா மரியம் குரியன் மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரியானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த நயன்தாரா தற்போது இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்தின் படு மாஸான அறிவிப்பை தற்போது ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
Announcing #ladySuperstar75 🥳
— Zee Studios (ZeeStudios_) July 12, 2022
Zee Studios is excited to collaborate with #Nayanthara for her 75th film! 💃🏻
The shoot will begin soon! 🎬#Jai #SathyaRaj Nilesh_Krishnaa dineshkrishnanb tridentartsoffl Naadstudios pic.twitter.com/nVVCnLek83
லேடி சூப்பர்ஸ்டார் 75
தளபதி 67, ஏகே 61 அப்டேட்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அட்டகாசமாக லேடி சூப்பர்ஸ்டார் 75 என்கிற டைட்டிலுடன் படு மாஸான அறிவிப்பை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இந்த படம் நேரடியாக தியேட்டரில் வருமா? அல்லது ஜி5 ஓடிடியில் வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓடிடி ஹீரோயின்
முன்னணி நடிகர்களின் படங்களை தவிர மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்கள் நல்லா இருந்தால் கூட தியேட்டருக்கு போய் பார்க்கும் மனநிலையில் மக்கள் தற்போது இல்லை என்பதை சமீப காலத்தில் வெளியான சில நல்ல படங்களும் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியடைந்தது உணர்த்துகிறது. அதை மனதில் வைத்தே மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், ஓ2 என தொடர்ந்து நயன்தாரா ஹீரோயின் சென்ட்ரிக்காக நடிக்கும் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகிறார்.

ராஜா ராணி கனெக்ஷன்
நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் கனெக்ட் படத்தில் சத்யராஜ் நடித்து வரும் நிலையில், 75வது படத்திலும் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும், ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருந்த நடிகர் ஜெய்யும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழுவும் நடிகர் ஜெய் மற்றும் சத்யராஜை டேக் செய்துள்ளனர். ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற இருவரும் மீண்டும் நயன்தாரா 75 படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெய் வில்லனா
சமீபத்தில் சுந்தர். சியின் பட்டாம்பூச்சி படத்தில் சைக்கோ வில்லனாக ஜெய் நடித்த நிலையில், உமன் சென்ட்ரிக் ரோலில் கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ள இந்த 75வது படத்திலும் ஜெய் வில்லனாக நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களிலேயே கவனம் செலுத்தி நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் சைக்கோ வில்லனாக நடித்திருந்தார்.

ஷங்கர் அசிஸ்டன்ட்
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி தனது அறிமுகப்படத்திற்கு நயன்தாரா தான் ஹீரோயினாக வேண்டும் என எப்படி அவரை ராஜா ராணி படத்தில் மீண்டும் நடிக்க அழைத்து வந்து இப்படியொரு உயரத்திற்கு கொண்டு வந்தாரோ, அதே போல ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75வது படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.