இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிஸியான கமல்… அரசியல் பஞ்ச் வசனங்களை அதிரடியாக கட் செய்த ஷங்கர்…

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இயக்குநர் ஷங்கர் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்

1996ல் வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பல தடைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்கில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல், ஷங்கர் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது கமல் நடிக்கும் போர்ஷனை ஷங்கர் படமாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு சென்னை, திருப்பதி பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

முதல் பாகம் முழுக்க அரசியல்

முதல் பாகம் முழுக்க அரசியல்

கமல் - ஷங்கர் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியிருந்தது. கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அரசியல் பஞ்ச் வசனங்களிலும் மாஸ் காட்டியிருந்தது. அரசுத் துறையில் நடக்கும் லஞ்சம், ஊழல்களை பின்னணியாக வைத்து ஷங்கர் இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக இந்தியன் தாத்தா கமலுக்கும், அவரது மகனாக வரும் சந்துரு கமலுக்கும் இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் சரியாக ரீச்சாகி இருந்தன.

இரண்டாம் பாகத்தில் மாற்றம்

இரண்டாம் பாகத்தில் மாற்றம்

இந்தியன் 2 திரைப்படமும் அரசியல் பின்னணியில் இருக்கும் என ஷங்கர் கூறியிருந்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருவதால், இதில் லஞ்சம், ஊழல் குறித்து புரட்சிகரமான வசனங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். முதலில் அரசியல் கருத்துகள் அதிகம் இருப்பதை போன்றுதான் வசனங்கள் எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், தற்போது பட தயாரிப்பில் ரெட் ஜெயன்ட்ஸும் இணைந்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய பஞ்சாயத்துகளை எடுக்க முடிவு

புதிய பஞ்சாயத்துகளை எடுக்க முடிவு

இந்தியன் 2 வில் இடம்பெற இருந்த லஞ்சம், ஊழல் தொடர்பான வசனங்கள், காட்சிகளை அப்படியே நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக சமூகம் சார்ந்த புதிய கருத்துகளை சேர்க்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்றார் போல கதையிலும் திரைக்கதையிலும் ஷங்கர் சில திருத்தங்கள் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் தான் இயக்கி வருகிறார். அந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X