»   »  டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!

டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடிக்கிற வெயிலில் அந்து அவலாகிக் கொண்டிருக்கிறார்கள் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுக்காக வாக்கு சேகரிக்கும் ஆதரவாளர்களும்.

யார் ஜெயிப்பார்கள் என்பது கிட்டத்தட்ட தெரிந்த சங்கதிதான் என்றாலும், எப்படியாவது தங்களுக்கு கூடுதல் வாக்குகள் பெற கட்சிகளின் வேட்பாளர்கள் தம் கட்டுகிறார்கள்.

Shankar disappoints with Amy's election campaign decision

ஆர்கே நகரில் செல்வாக்கு மிக்க வேட்பாளர் இருக்கிறார்களோ இல்லையோ... ஆனால் பசையான வேட்பாளர் என்றால் அது டிடிவி தினகரன்தான். அவருக்கு இந்தத் தேர்தலில் வெல்வது மானப் பிரச்சினை மற்றுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிற விஷயம்.

அதனால் சகல அஸ்திரங்களையும் ஏவிக் கொண்டிருக்கிறார் தினகரன். அதில் ஒன்றுதான் பிரச்சாரத்துக்காக ரஜினி பட ஹீரோயினான எமி ஜாக்ஸனை களமிறக்குவது.

எமி ஜாக்ஸனுக்கும் இந்த பிரச்சார சமாச்சாரம் ரொம்பப் பிடித்துவிட்டதாம். கேட்ட தொகையையும் தர தினகரன் தரப்பு ஒப்புக் கொண்டதால், விரைவில் ஆர் கே நகர் வீதிகளில் வலம் வரப் போகிறார் எமி.

இது இயக்குநர் ஷங்கருக்கு பெரும் குடைச்சலாக உள்ளதாம். ஏற்கெனவே படத்துக்கு எதிராக யார் எப்போது கிளம்புவார்கள் என்று தெரியாத நிலையில், தெரிந்தே வேலியில் போகிற ஓணானை பிடித்து கவுனுக்குள் விட்டுக் கொள்ள வேண்டுமா? என்று என்னதான் புத்திமதி சொல்லியும், எமி கேட்கணுமே... ம்ஹூம்!

English summary
Director Shankar is deeply disappointed with Amy Jackson's decision of campaigning for ADMK in RK Nagar election

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil