twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 விவகாரம்...ஷங்கருக்கு க்ரீன் சிக்னல் காட்டிய ஐகோர்ட்

    |

    சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், மனோபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல காரணங்களால் தள்ளி போன இந்த படம், தற்போது வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளது.

    இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனத்திற்கும், டைரக்டர் ஷங்கருக்கும் இடையேயான வழக்கு பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வருவால் வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் போய் கொண்டிருக்கிறது.

    கூடிய விரைவில் தொடங்கவுள்ள தனுஷின் பான் இந்தியா திரைப்படம்.. தயாரிப்பாளர்களுடன் தனுஷ் பேச்சு! கூடிய விரைவில் தொடங்கவுள்ள தனுஷின் பான் இந்தியா திரைப்படம்.. தயாரிப்பாளர்களுடன் தனுஷ் பேச்சு!

    எப்படி இருந்தாலும் ஷங்கர் புதிய படங்களை இயக்க தடை பெற்றே ஆக வேண்டும் என்ற முடிவில் லைகா பிடிவாதமாக உள்ளது. இதற்காக ஐதராபாத் ஐகோர்ட்டிலும் ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு தொடர்ந்தது.

    ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

    ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

    ஏற்கனவே சென்னை ஐகோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் இருதரப்பும் சமரசம் பேச மறுத்து வந்தன. சமரசத்திற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சமரச பேச்சு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை ஐகோர்ட் நியமித்தது.

    மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

    மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

    சமரச பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்தியன் 2 படம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், லைகா ப்ரொடக்ஷன்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    லைகா கோரிக்கைகள் நிராகரிப்பு

    லைகா கோரிக்கைகள் நிராகரிப்பு

    சிக்கலில் இருக்கும் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்தையும் ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும். இந்தியன் 2 படத்தை முடிப்பதற்கு முன் மற்ற படங்களை இயக்க மாட்டேன் என ஷங்கர் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என லைகா தரப்பில் முன்வைக்கப்பட்ட அத்தனை கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    புதிய படத்திற்கு தயாராகும் ஷங்கர்

    புதிய படத்திற்கு தயாராகும் ஷங்கர்

    கோர்ட்டின் இந்த உத்தரவால் இனி இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் காத்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே அறிவித்த ராம் சரண் உடனான தெலுங்கு படம், ரன்வீர் சிங் உடனான அந்நியன் இந்தி ரீமேக் போன்ற பட வேலைகளில் இறங்க எந்த தடையும் இல்லை. லைகா நிறுவனமும் தனது பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நம்பிக்கை தந்த உத்தரவு

    நம்பிக்கை தந்த உத்தரவு

    கோர்ட்டின் இந்த புதிய உத்தரவு ஷங்கருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மட்டுமல்ல சமரசம் செய்து வைக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதிக்கும் புதிய நம்பிக்கையை தந்துள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்க வைப்பதற்கு இது நல்ல துவக்கமாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Chennai Hight Cour dismissed all the petitions filed by Lyca Productions seeking a ban on director Shankar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X