»   »  அக்ஷய் குமார் கடின உழைப்பாளி... - ஷங்கர் புகழாரம்

அக்ஷய் குமார் கடின உழைப்பாளி... - ஷங்கர் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்ஷய் குமார் ஒரு கடின உழைப்பாளி.. அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியைத் தருகிறது என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.ஓ-வின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Shankar hails Akshay Kumar

ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


எந்திரன் 2-வில் வில்லனாக நடிக்க ஷங்கரின் முதல் தேர்வு அர்னால்ட் தான். அதிக சம்பளம் கேட்டதால் அக்‌ஷய் குமாரைத் தேர்வு செய்தார் ஷங்கர்.


அக்‌ஷய் குமாரின் தொழில் நேர்த்தி, ஈடுபாடு குறித்து சிலாகித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.


இதுபற்றி அவர் கூறுகையில், "அக்‌ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவர் ஒரு கடினமான உழைப்பாளி. நன்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடியவர்," என்றார்.

English summary
Director Shankar has hailed Akshay Kumar as a dedicated artist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil