»   »  ஷங்கர் என் குரு இல்லை, அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ராஜமவுலி

ஷங்கர் என் குரு இல்லை, அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் என் குரு இல்லை. தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாகுபலி 2 படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

ஷங்கர்

ஷங்கர்

ராஜமவுலியின் டைரக்ஷன் ஸ்டைல் மற்றும் விஎஃப்எக்ஸ் பயன்பாட்டை பார்த்து பலரும் அவரை இயக்குனர் ஷங்கருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

குரு

குரு

ஷங்கருடன் ஒப்பிடுவது குறித்து ராஜமவுலி செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஷங்கர் என் குரு இல்லை, நான் அவரிடம் பணியாற்றியது இல்லை. ஆனால் அவருடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் வெட்கமாக உள்ளது. தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்றார்.

சென்னை

சென்னை

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக ராஜமவுலி 5 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். இந்த 5 ஆண்டுகளும் ஹீரோ பிரபாஸ் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி, பாகுபலி 2 படங்களை போன்று இல்லாமல் விஎஃப்எக்ஸ்-ஐ பயன்படுத்தாமல் சாதாரண படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராஜமவுலி. அவர் எப்படி படம் எடுத்தாலும் அதில் நடிக்க பலரும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Rajamouli has asked people not to compare him with director Shankar. He also added that Shankar is not his guru.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil