»   »  நெஞ்சுவலி காரணமாக.. பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக.. பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வராக நதிக்கரையோரம், தனியே தன்னந்தனியே உட்பட பல்வேறு பிரபலமான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் சங்கர் மகாதேவன்.

கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நெஞ்சுவலி காரணமாக சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது.

Shankar Mahadevan admitted to hospital

மேலும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு பெற்று செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இந்த செய்திகளை சங்கர் மகாதேவனின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். அவர் கூறும்போது "சங்கர் மகாதேவன் தற்போது நன்றாக இருக்கிறார்.

இன்னும் ஒருசில தினங்களில் அவர் குணமாகி மும்பை திரும்பிவிடுவார்" என்று சங்கர் மகாதேவன் உடல்நிலை குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

English summary
Last Friday Famous Playback Singer Shankar Mahadevan Admitted to Hospital. The 48 year old singer Affected back to back cardiac attacks so He is Admitted in Delhi Hospital.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil