ஒரே நேரத்தில் இந்தியன் 2, RC15 சூட்டிங்.. பார்த்து செய்யுங்க ஷங்கர் என ரசிகர்கள் கோரிக்கை!

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஷங்கர் தெலுங்கில் இயக்கி வந்த ராம்சரணின் RC15 படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது? என்கிற கேள்வி எழுந்தது.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

இந்நிலையில், அதற்கு விளக்கம் தந்துள்ள ஷங்கரின் ட்வீட் மேலும், ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் தடைப்பட்ட நிலையில், ராம்சரண் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியனுக்கு சாவே இல்லை

இந்தியனுக்கு சாவே இல்லை

இந்தியன் படத்தின் கிளைமேக்ஸில் சேனாபதி டெலிபோனில் பேசும் போது இந்தியனுக்கு சாவே இல்லை என்பார். அதே போல, இந்தியன் 2 படமே டிராப் ஆகி விட்டது என படத்தில் சம்பந்தப்பட்டவர்களே நினைத்திருந்த நிலையில், இந்தியன் 2 படம் டிராப்பே இல்லை என்பது போல மீண்டும் உதயநிதியின் உதவிக் கரங்களால் உயிர் பிழைத்துள்ளது.

ராம்சரண் படம் அப்போ

ராம்சரண் படம் அப்போ

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் மீண்டும் இயக்குநர் ஷங்கர் தொடங்குவதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் முதல் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இந்நிலையில், இந்த அப்டேட்டால் தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ராம்சரண் ரசிகர்கள் அப்போ RC15 படத்தின் படப்பிடிப்பு எப்போ ஆரம்பித்து முடிப்பீங்க என ஷங்கரை நச்சரிக்கத் தொடங்கினர்.

ஒரே நேரத்துல 2 படம்

ஒரே நேரத்துல 2 படம்

இந்நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் RC15 படங்களின் படப்பிடிப்புகளை வரும் செப்டம்பர் முதல் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் நடத்த உள்ளேன் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டார்.

ராம்சரண் வெயிட்டிங்

ராம்சரண் வெயிட்டிங்

மீண்டும் நம்ம பட செட்டில் உங்களை காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ஷங்கர் சார். இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கியதை அறிந்து ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன் என ராம்சரணும் ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். ஆனால், இரண்டு படங்களையு ஒரே நேரத்தில் எடுத்தால் எந்த படம் உருப்படியாய் வரும் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஐ, 2.0 படங்கள் எல்லாம் சிங்கிள் படமாக ஷூட் செய்யப்பட்ட நிலையிலேயே ரொம்ப சொதப்பின. இந்நிலையில், அவரை லைகா நிறுவனம் இப்படி ஒரே நேரத்தில் இரு படங்களை எடுக்க வற்புறுத்துவது இரண்டு பிரம்மாண்ட படங்களுக்குமே பெரிய சிக்கலை உண்டாக்கும் பார்த்து செய்யுங்க ஷங்கர் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X