»   »  சென்னையில் மீண்டும் ப்ரேமம்... இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

சென்னையில் மீண்டும் ப்ரேமம்... இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்படி என்னதான்யா இருக்கு இந்த ப்ரேமம் படத்துல? என்று கேட்கும் அளவுக்கு தாறுமாறாக ஓடி வசூலைக் குவித்துவிட்டது ப்ரேமம் படம்.

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான இந்த மலையாளப் படம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது.

Shankar praises Alphonse Puthran for Premam

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த காதல் படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழகத்திலும் வெளியானது.

மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் இந்தப் படம் ஏகத்துக்கும் கவர்ந்துவிட்டது. குறிப்பாக இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாய்ந்து மாய்ந்து பார்த்து சமூக வலைத் தளங்களில் இப்படத்தைக் கொண்டாடினர்.

சென்னையில் தொடர்ந்து 230 நாட்களாக ஓடிய இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியான புதிய தமிழ்ப் படங்களுக்காக தூக்கப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் பலர் மீண்டும் இந்தப் படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொண்டனர். எனவே மீண்டும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

ஷங்கர் வாழ்த்து

இந்நிலையில் ‘ப்ரேமம்' படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் ஷங்கர், "உயிரோட்டமுள்ள யதார்த்தமான படம் இது. பிரேமம் படக்குழுவினருக்கும் இயக்குvர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்," என்று வாழ்த்தியுள்ளார்.

English summary
Top director Shankar has praised Alphonse Puthran's mega hit movie Premam after watched it in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil