»   »  துருவங்கள் பதினாறு.... 'பர்ஃபெக்ஷனிஸ்ட்' ஷங்கரே பாராட்டிட்டாரு!

துருவங்கள் பதினாறு.... 'பர்ஃபெக்ஷனிஸ்ட்' ஷங்கரே பாராட்டிட்டாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ஷங்கர் கிட்ட ஒரு சினிமா இயக்குநர், அதுவும் புதிய இயக்குநர் பாராட்டுப் பெறுவதென்பது லேசுபட்ட காரியமல்ல. காரணம் அப்படி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட் ஷங்கர். அவரே மனசார ஒரு புதுமுகத்தைப் பாராட்டியுள்ளார்.

அவர்தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர்.

Shankar praises Dhuruvangal Pathinaaru

இத்தனைக்கும் கார்த்திக் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் அல்ல. ஒரே ஒரு படத்தில் சில தினங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு, நேரடியாகவே துருவங்கள் பதினாறை இயக்கியவர் கார்த்தி.

இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டாத திரையுலகப் பிரபலங்களே இல்லை எனலாம். அத்தனைப் பேருமே கார்த்திக் நரேனை அடுத்த மணிரத்னம், அடுத்த ஷங்கர் என்றெல்லாம் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்க, அந்த ஷங்கரே தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு பார்த்துவிட்டு ட்விட்டரில் இப்படி பாராட்டியுள்ளார் ஷங்கர்:

"ஸ்க்ரிப்டில் அழுத்தமான நம்பிக்கை வைத்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள படம் துருவங்கள் பதினாறு. இயக்குநர் கார்த்திக் நரேன், ஒளிப்பதிவாளர், நடிகர் ரகுமான் அனைவருக்கும் பாராட்டுகள்," என்று குறிப்பிட்டுள்ளார் ஷங்கர்.

English summary
Director Shankar has praised Dhuruvangal Pathinaaru director Karthik Naren for his perfection and making.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil