»   »  என்னை ரஜினி அழைத்தார், ஷங்கர் வேண்டாம் என்றார்: சரத்குமார்

என்னை ரஜினி அழைத்தார், ஷங்கர் வேண்டாம் என்றார்: சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தில் வில்லனாக நடிக்க ரஜினி அழைத்ததாகவும் ஷங்கர் வேண்டாம் என்று கூறியதாகவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்நிலையில் படம் பற்றி நடிகர் சரத்குமார் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ரஜினி சார்

ரஜினி சார்

ஒரு நாள் ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். 2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார். ரஜினி சாரே என்னிடம் கேட்டதால் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஷங்கர்

ஷங்கர்

2.0 படத்தின் சர்வதேச அப்பீலை மனதில் வைத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒருவரை அணுகியுள்ளோம். அடுத்த முறை நாம் ஒன்றாக சேர்ந்து பணியாற்றலாம் என்று ஷங்கர் தெரிவித்தார் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

அடங்காதே

அடங்காதே

அரசியலில் பிசியாக இருந்த சரத்குமார் தற்போது மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிப்பு

நடிப்பு

நடிகர் புனித் ராஜ்குமாரும், சரத்குமாரும் சேர்ந்து 'ராஜகுமாரா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்கள். இது தவிர சரத்குமார் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sarath Kumar said that though Rajinikanth approached him for 2.0, Shankar rejected him saying next time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil