1000 கோடி பட்ஜெட்டில் மல்டி ஸ்டார் படம் இயக்குகிறாரா ஷங்கர்...அப்போ இந்தியன் 2 நிலைமை?
சென்னை : பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி, பிளாக் பஸ்டர் படங்களை தருவதில் வல்லவர் டைரக்டர் ஷங்கர். இதனால் ஷங்கர் என்றாலே எப்போதும் தனி ஆர்வம், ஈர்ப்பு இருக்கும்.
இவர் கடைசியாக ரஜினி நடித்த 2.ஓ படத்தை தமிழில் இயக்கினார். ரஜினி, அக்ஷய் குமார் நடித்த இந்த படம் 545 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். ஆனால் பல காரணங்களால் 2019 ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது வரை துவங்கப்படவில்லை.
3 வருடங்களாக பல பிரச்சனைகளால் முடங்கி கிடந்தாலும் தற்போது வரை இந்தியன் 2 படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறையவில்லை. இந்த படத்தின் வேலைகள் மீண்டும் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் இடைவிடாமல் கேட்டு வருகின்றனர்.

ராம் சரணிற்கு 100 கோடி சம்பளம்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி டாப் டைரக்டராக இருந்து வரும் ஷங்கர், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை தற்போது இயக்கி வருகிறார். கியாரா அத்வானி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்காக ராம் சரணிற்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

1000 கோடியில் ஷங்கரின் கனவு படம்
இந்நிலையில் தனது கனவு படம் பற்றி ஷங்கர் சமீபத்தில் பேசி உள்ளார். 1000 கோடி பட்ஜெட்டில் ராம் சரண், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை வைத்து மெகா பட்ஜெட் படம் இயக்குவது தான் தனது கனவு என தெரிவித்துள்ளார். இந்த படத்தை தண்ணீருக்கு அடியிலேயே முழுக்க முழுக்க எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இது இந்தியா சினிமாவிற்கே மிக பெரிய அங்கீகாரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அப்போ இந்தியன் 2 நிலைமை
இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தாலும், ஆர்சி 15 படத்தை முடித்த பிறகு அல்லது அதற்கு முன்பாகவே இந்தியன் 2 படத்தின் வேலைகளை ஷங்கர் முடிக்க போகிறார், விரைவில் இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஷங்கர், ஆர்சி 15, கனவு படம், அந்நியன் இந்தி ரீமேக் என பிளான் செய்து கொண்டிருப்பதால் இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்படுமா, படம் ரிலீசாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Recommended Video

ஷங்கர் எதுவுமே பேசலியே
அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசும் ஷங்கர், ஏன் இந்தியன் 2 படம் பற்றி எதுவும் பேச மறுக்கிறார். கமலே சமீபத்தில் இந்தியன் 2 விரைவில் துவங்கப்படும் என சொல்லி விட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட டைரக்டர் படம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். என்ன காரணம், என்ன நடக்கிறது என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











