»   »  தள்ளிப் போகிறது ஷங்கரின் ஐ பட வெளியீடு?

தள்ளிப் போகிறது ஷங்கரின் ஐ பட வெளியீடு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் ஐ படம் மே மாதத்தில் வெளியாவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்சன் நடித்து வரும் படம் ஐ.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.

Shankar's Ai postponed?

இதில் விக்ரம் உடல் மெலிந்த நோஞ்சான் - சாதாரண தோற்றம் என இரு பரிமாணங்களில் தோன்றுகிறார்.

சுரேஷ்கோபி, சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

'ஐ' பட பாடல்களை கனடாவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அர்னால்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இவ்வளவு ஏற்பாடுகள் நடந்தாலும், இன்னும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடியவில்லையாம். எப்படியாவது மே மாதம் வெளியிட்டுவிடத் திட்டமிட்டிருந்தனராம். ஆனால் மே மாதத்தில் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது.

இன்னொரு பக்கம், கமலின் விஸ்வரூபமும் மே இறுதிக்குள் வெளியாகக் கூடும் என்கிறார்கள். இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் மே இறுதிக்குள் படம் வெளியாவது கஷ்டம் என்கிறார்கள் படக்குழுவைச் சேர்ந்தவர்கள். ஜூன் முதல் வாரத்தில் படத்தை வெளியிட முயற்சிக்கிறார்கள்.

Please Wait while comments are loading...