»   »  எந்திரன் 2 வின் பட்ஜெட் இத்தனை கோடிகளா?

எந்திரன் 2 வின் பட்ஜெட் இத்தனை கோடிகளா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினி தற்போது கபாலி படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம் முடிந்ததும் அடுத்ததாக அவர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Shankar's Endhiran 2 Budget

கடந்த 2010 ம் ஆண்டில் வெளிவந்து தென்னிந்திய சினிமாவை இந்தியளவில் கவனம் பெறச்செய்த எந்திரன் படத்தின் 2 வது பாகமாக எந்திரன் 2 திரைப்படத்தை ஷங்கர் உருவாக்கவிருக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகிறார் என்று வெளியான செய்திகளால் எந்திரன் 2 படம் தற்போது உலகளவில் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் சுமார் 300 கோடி செலவில் உருவாகவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எந்திரன் 2 வின் பட்ஜெட் 300 கோடியாக இருந்தால் இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவான படம் என்ற பெருமையை இப்படம் பெறும் என்று திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

English summary
After Vikram's I Shankar Now Planning for Endhiran 2 Movie, Latest Buzz in Kollywood Endhiran 2 Cost may be intimate to 300 Crores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil