»   »  யு ஏ சான்றிதழுடனே வெளியாகிறது ஐ... போட்ட முதல் திரும்புமா?

யு ஏ சான்றிதழுடனே வெளியாகிறது ஐ... போட்ட முதல் திரும்புமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் படம் ஒரு வழியாக பொங்கலுக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது.

ஆனால் சென்சாரில் இந்தப் படத்துக்கு யு சான்று கிடைக்கவில்லை. யு ஏ சான்றுதான். இதன் மூலம் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

Shankar's I releasing with UA certificate

படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் மிக கோரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கொடுத்தது சென்சார்.

வரி விலக்கு கிடைக்காமல் போகுமே என்பதற்காக, யு சான்று பெற டெல்லியில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர்.

ஆனால் அவர்கள் யு சான்று தர முடியாது என மறுத்துவிட்டனர். இதற்காக காத்திருந்தால் படம் மொத்தமாகவே போய்விடும் வாய்ப்பு இருப்பதால், யு ஏ சான்றுடனே வெளியிடுகிறார்கள்.

இதனால் 30 சதவீத வரியை அரசுக்கு செலுத்தியாக வேண்டும், ஐ வசூலிலிருந்து.

English summary
Shankar's I movie is releasing on Pongal Day with UA certificate.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil