இந்தியன் 2 முடித்த கையோடு மீண்டும் ரஜினியை இயக்குகிறாரா ஷங்கர்.. அதற்குத்தான் அந்த சந்திப்பா?

சென்னை: லைகா நிறுவனம் அடுத்தடுத்து ரஜினிகாந்தை வைத்து 2 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானதில் இருந்து, அந்த இரு படங்களையும் இயக்கப் போகும் இயக்குநர்கள் யார் யார் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

லைகா தயாரிப்பில் டான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த சிபி சக்கரவர்த்தி தான் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்கப் போகிறார் என்பது 99 சதவீதம் உறுதியாகி விட்டது.

தலைவர் 171 படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்விக்கும் தற்போது கிட்டத்தட்ட பதில் கிடைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெயிலர் படத்தின் சூட்டிங் முடிவடைந்து அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா இயக்கத்தில் 2 படம்

லைகா இயக்கத்தில் 2 படம்

லைகா தயாரிப்பில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த 2.0 மற்றும் தர்பார் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் லைகா ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணாது என பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், இந்த ஆண்டு டான், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பெரிய கலெக்‌ஷனை அள்ளி உள்ள லைகா நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து 2 படங்களை தயாரிக்க முன் வந்துள்ளது.

டான் இயக்குநர்

டான் இயக்குநர்

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படமே க்ரிஞ்ச் மேக்ஸ் என விமர்சிக்கப்பட்டாலும், வசூல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அந்த படம் ஏகப்பட்ட ரசிகர்களை கடந்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. உடனடியாக ரஜினியை சந்தித்து சிபி சொன்ன கதை பிடித்துப் போக லைகா தயாரிப்பில் சிபி இயக்கத்தில் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மகளா? மணிரத்னமா?

மகளா? மணிரத்னமா?

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் 2 படங்களில் கமிட் ஆகி உள்ள நிலையில், ஒரு படத்தை சிபி இயக்க உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. இன்னொரு படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப் போகிறாரா? அல்லது பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் இயக்கப் போகிறாரா? என ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஷங்கர் சம்பவம்

ஷங்கர் சம்பவம்

ஆனால், இந்தியன் 2 படத்தை முடித்த கையோடு ரஜினிகாந்தை வைத்து லைகா இயக்கத்தில் ஷங்கர் தான் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற பேச்சுக்களும் தற்போது கிளம்பி உள்ளன. சமீபத்தில் சிவாஜி படத்தின் 15ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்தை இயக்குநர் ஷங்கர் சந்தித்து இருந்தார். அந்த சந்திப்பே இதற்காகத்தான் என்றும் கூறுகின்றனர். சிவாஜி 2வா? அல்லது 3.0வா இல்லை இதிகாச படமா என ஏகப்பட்ட கேள்விகளும் கிளம்பி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X