»   »  விஜய்யை இயக்கிய ஷங்கரின் கைக்குப் போகிறார் அஜீத்?

விஜய்யை இயக்கிய ஷங்கரின் கைக்குப் போகிறார் அஜீத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 அதாவது எந்திரன் படத்தில் இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் மீண்டும் துவங்கியது.

Shankar to work with Ajith after Rajini?

2.0 படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார் ஷங்கர். இந்நிலையில் ஷங்கர் ஆக்ஷன் த்ரில்லர் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். இந்த படத்தில் அஜீத் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ஷங்கர் நினைக்கிறாராம்.

அஜீத்தை ஷங்கர் இயக்குவது குறித்து பேசப்படுகிறதே தவிர இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல 57' படத்தில் நடித்து வருகிறார்.

அஜீத் 'தல 57' படத்தை முடித்த பிறகும், ஷங்கர் ரஜினி படத்தை முடித்த பிறகும் புதிய பட வேலையை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Buzz is that director Shankar is planning to work with Ajith after completing 2.0 movie with Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil