»   »  அண்ணனின் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கு விளம்பர தூதுவராக மாறிய சின்ன கேப்டன்

அண்ணனின் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கு விளம்பர தூதுவராக மாறிய சின்ன கேப்டன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அண்ணன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதுவராக மாறியிருக்கிறார் இளம் நாயகன் சண்முகப் பாண்டியன்.

சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முகப் பாண்டியன். இவர் தற்போது தனது தந்தை விஜயகாந்துடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Shanmuga Pandian Brand Ambassador of Chennai Smashers

நேற்று நடந்த சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிண்டன் அணியின் அறிமுக விழாவில் அணியில் உள்ள வீரர், வீராங்கனைகளை பத்திரிக்கையாளர்களுக்கு விஜய பிரபாகரன் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் மஞ்சள் நிறத்தினாலான அணியின் ஜெர்ஸியையும் அவர் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது தனது அணியின் விளம்பர தூதுவராக வளர்ந்து வரும் நாயகன் சண்முகப் பாண்டியனை நியமித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தனது சகோதரர் என்பதால் அவரை நியமிக்கவில்லை என்றும், இயல்பாகவே விளம்பரத் தூதுவராக இருப்பவர் உயரமாக இருக்க வேண்டும் என்பதால் அவரை நியமித்ததாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என்பது போன்று சென்னை பேட்மிண்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்ற வாசகத்தை வைத்திருக்கின்றனர்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ததால் தான் அந்த அணியின் தீவிர ரசிகர் என்ற முறையில் அதன் ஞாபகமாக சிங்க லோகோவை தனது அணிக்கு வைத்திருக்கிறார் விஜய பிரபாகரன்.

English summary
Actor Shanmuga Pandian, the Younger son of the Vijayakanth was the Brand Ambassador of Chennai Smashers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil