»   »  'மதுரவீரன்' ஆகும் கேப்டன் மகன் சண்முகப் பாண்டியன்: படம் நாளை ஆரம்பம்#MaduraVeeran

'மதுரவீரன்' ஆகும் கேப்டன் மகன் சண்முகப் பாண்டியன்: படம் நாளை ஆரம்பம்#MaduraVeeran

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் மதுரவீரன் திரைப்பட பூஜை மற்றும் படப்பிடிப்பு 24.04.2017 அன்று ஆரம்பம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் தந்தை வழியில் நடிகராகியுள்ளார். அவர் சகாப்தம் படம் மூலம் ஹீரோவானார். சகாப்தம் சத்தமில்லாமல் வந்துவிட்டு போனது.

படம் வெற்றி, தோல்வி அடைவது எல்லாம் சகஜம் என்பதை நன்கு புரிந்து கொண்ட விஜயகாந்த் தனது மகனுக்கு ஆறுதல் கூறி அடுத்த படத்திற்கு தயார்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விஜயகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

#சண்முகப்பாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் திரைப்பட பூஜை மற்றும் படப்பிடிப்பு 24.04.2017 அன்று ஆரம்பம்.
#MaduraVeeran என தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth announced on twitter that his son Shamuga Pandian's upcoming movie Maduraveeran will go on floors from tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil